Advertisment

தமிழகத்தை மிரட்டும் கொரோனா வைரஸ்... 4 பேருக்கு அறிகுறிகள்!

இரத்த மாதிரிகள் தி கிங் இன்ஸ்ட்டியூட் ஆஃப் பிரவென்டிவ் மெடிசன் அன்ட் ரிசர்ச் செண்டரில் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழகத்தை மிரட்டும் கொரோனா வைரஸ்... 4 பேருக்கு அறிகுறிகள்!

COVID19 novel Coronavirus cases in Tamil Nadu : உலகின் பல்வேறு பகுதிகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரம் காட்டத் துவங்கியுள்ளது. இதுவரை அந்த நோய்தொற்றின் அறிகுறிகளுடன் 29 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நான்கு நபர்களுக்கு நோயின் அறிகுறி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Advertisment

சிங்காரச் சென்னை வரலாறு 1 : இது தங்கசாலை தெரு உருவான கதை...

2 வயது குழந்தைக்கு இந்நோயின் அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே போன்று ஜப்பானில் படித்து வந்த ஆராய்ச்சி மாணவர் ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் கோவையில் இருக்கும் ஈ.எஸ்.ஐ. மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜப்பானில் இருந்து சிங்கப்பூர் வழியாக சென்னை வந்தவர், சென்னையில் இருந்து கோவைக்கு ரயிலில் சென்றுள்ளார்.

மேலும் படிக்க : கொரொனோ வைரஸ் live : இத்தாலிய சுற்றுப் பயணிகள், இந்தியாவில் 215 பேருடன் தொடர்பு கொண்டிருக்கலாம் – ராஜஸ்தான் அமைச்சர்

இந்த இருவரின் இரத்த மாதிரிகள், சென்னை கிண்டியில் அமைந்திருக்கும், தி கிங் இன்ஸ்ட்டியூட் ஆஃப் பிரவென்டிவ் மெடிசன் அன்ட் ரிசர்ச் செண்டரில் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.  மலேசியாவில் இருந்து திருச்சி வந்தடைந்த மூவருக்கு (2 வயது ஆண் குழந்தை உட்பட) இந்த நோயின் தொற்று இருந்ததைத் தொடர்ந்து அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுரை மற்றும் தென்மாவட்டங்களில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை.

சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, திருச்சி, கோவை மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு விமானங்கள் மூலம் பயணித்த சுமார் 96 ஆயிரத்து 729 பயணிகளுக்கு இந்த நோய் தொடர்பான ஸ்கிரீனிங் நடத்தப்பட்டுள்ளது. அதில் 1292 நபர்களை வீட்டில் இருந்து வெளியேற வேண்டாம் என்று குவாரண்டைன் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 5 பேர் மருத்துவமனையில் குவாரன்டைன் செய்யப்பட்டுள்ளனர். இது போன்று சென்னையில் தான் அதிக அளவில் பொதுமக்கள் குவாரன்டைன் செய்யப்பட்டுள்ளனர். சென்னையை தொடர்ந்து ராமநாதபுரம், கோவை, மற்றும் நாகை மாவட்டங்களில் அதிக அளவு மக்கள் குவாரன்டைன் செய்யப்பட்டுள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"  

மக்கள் மத்தியில் கொரோனா வைரஸ் குறித்த தவறான செய்திகளை பரப்பவேண்டாம். நோயின் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விமானநிலையங்களில் பயணிகளை பரிசோதனை செய்யும் முறையும் தீவிரமடைந்துள்ளது. பள்ளிகளில் குழந்தைகளுக்கு இந்த அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என்பதை தீவிரமாக கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக கோவை மாவட்ட ஆட்சியர் கே. ராஜாமணி அறிவித்துள்ளார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment