Coronavirus : கொரோனா வைரஸ் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க ஒருவர், அரியலூரில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று நெகட்டிவ் என்பது தெரிய வந்தது. ஆனால் அப்போது அவர் உயிருடன் இல்லை.
முதல்வர்களுடன் இன்று மோடி ஆலோசனை: ஊரடங்கு நீடிப்பது குறித்து முக்கிய முடிவு
கேரளாவில் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்த அந்த நபர், மார்ச் 23 அன்று அரியலூர் மாவட்டத்திலுள்ள தனது சொந்த கிராமத்திற்குத் திரும்பி வீட்டு தனிமைப்படுத்தலில் இருந்தார். ஏப்ரல் 6-ஆம் தேதி தானாக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு வந்தார். இருமல், காய்ச்சல் ஆகிய அறிகுறிகள் இருந்ததால், மருத்துவர்கள் அவரை தனிமைப்படுத்தினர்.
”அவர் COVID-19 க்கான அறிகுறிகளோடு, பயண வரலாற்றையும் கொண்டிருந்ததால், மருத்துவர்கள் ரத்த மாதிரிகளை எடுத்துவிட்டு, மருத்துவமனையின் தனிமை வார்டில் அந்த நபரை தனிமைப்படுத்தினர்” என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் டி ரத்னா தெரிவித்தார். வியாழக்கிழமை இரவு அந்த நபர் தனது மனைவியுடன் தொலைபேசியில் சண்டையிட்டதாகவும், ஃபோனில் அவரிடம் கூச்சலிட்டதாகவும் கூறப்படுகிறது.
மருத்துவமனை வட்டாரங்கள், சொந்தப் பிரச்னைகள் அவரின் தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்றும், அவரது குடும்ப உறுப்பினர்கள் தொலைபேசியில் கூட அவரது உடல்நிலையை விசாரிக்காதது குறித்து அவர் வருத்தப்பட்டதாகவும் தெரிகிறது. தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் உள்ள அனைத்து நோயாளிகளுக்கும் கட்டாயமாக இருக்கும் வழக்கமான மனநல அமர்வில் அந்த நபர் கலந்து கொண்டார் என்றும், மாலை 5 மணிக்கு தேநீர் மற்றும் சிற்றுண்டிகளை கூட சாப்பிட்டதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
"இரவு 7 மணியளவில் வழக்கமான விசிட்டுக்காக வார்டுக்குச் சென்ற ட்யூட்டி மருத்துவர் தான், அவரை விசிறியில் தொங்குவதைக் கண்டார். அவர் ஒரு ”துண்டைப் பயன்படுத்தி தூக்கு மாட்டியதாக” மருத்துவர் கூறினார். அவரது ரத்த மாதிரிகள் அவருக்கு கொரோனா இல்லை என்பதை உறுதிப்படுத்தின. ஆனால் இந்த முடிவை தெரிந்துக் கொள்ள அவர் உயிருடன் இல்லை.
மருத்துவமனையின் தனிமை வார்டுக்குள் நடந்த தற்கொலை, மருத்துவமனைகளின் தனிமை வார்டுகளில் தங்கியுள்ள நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. தனிமையில் உள்ள நோயாளிகளுக்கு உளவியல் ஆதரவை வழங்க, ஆலோசகர்களை தயார் செய்துள்ளதாக மாநில அரசு கூறுகிறது.
சிங்கப்பூரில் 250 இந்தியர்களுக்கு கொரோனா – தமிழர்கள் உட்பட வெளிநாட்டு ஊழியர்கள் குறித்து பிரதமர் உருக்கம்
COVID-19 மன அழுத்தத்தில் உள்ளவர்களுக்கு உதவி வழங்கும் ஆலோசகர்களின் மொபைல் எண்களையும் அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.