Advertisment

தமிழகத்தில் குறையும் கொரோனா தொற்று விகிதம்

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்கனவே 800 படுக்கைகள் உள்ளன. தற்போது இதில் 400 படுக்கைகளை அரசு சேர்த்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

author-image
WebDesk
New Update
covid 19 infection rates in tamil nadu

கொரோனா தொற்று எண்ணிக்கை

தமிழத்தில் வியாழக்கிழமை 5,528 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகி, 64 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 4,86,052-ஐ தொட்டது. இறப்பு எண்ணிக்கை மொத்தம் 8,154.

Advertisment

சர்க்கரை நோயாளிகளுக்கு இதைவிட பெஸ்ட் டின்னர் இல்லை..அடை தோசை!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 48,482 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். வியாழக்கிழமை 6,185 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் சிகிச்சை விகிதம் 88% ஆக உயர்ந்தது. குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 429,416 ஆக உயர்ந்துள்ளது.

"நாங்கள் இப்போது மெதுவாக மாநிலத்தில் தொற்று வீதத்தை குறைத்து வருகிறோம். கடலூர் போன்ற மாவட்டங்களைத் தவிர்த்து மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேர்மறை விகிதம் 10%-க்கும் குறைவாக தான் உள்ளது. ஆனால் குறைந்த தொற்று வீதத்தை பராமரிக்க, முக கவசம், சமூக விலகல் மற்றும் கை சுகாதாரம் ஆகிய தொற்றுநோய் விதிகளை மக்கள் பின்பற்ற வேண்டும்” என சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கூறினார்.

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்கனவே 800 படுக்கைகள் உள்ளன. தற்போது இதில் 400 படுக்கைகளை அரசு சேர்த்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். “புதிய படுக்கைகள் அனைத்தும் ஆக்ஸிஜன் படுக்கைகள். இது சென்னை மண்டலத்தில் உள்ள மக்களுக்கு உதவும்” என்றார்.

சென்னையில் 991 வழக்குகளும் 11 இறப்புகளும் பதிவாகியுள்ளன.  செங்கல்பட்டு (279), காஞ்சிபுரம் (173), திருவள்ளூர் (296) ஆகியவையும் சேர்ந்து 748 புதிய தொற்றுகள் சென்னை மண்டலத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.  சென்னை மண்டலத்தில் 16,541 தொற்றுகள் செயலில் உள்ளன. இதில் சென்னையின் 10,845 தொற்றுகளும் அடங்கும். மற்ற வட மாவட்டங்களில் 1001 தொற்றுகளும் 14 இறப்புகளும் பதிவாகியுள்ளன. கடலூரில் 263, விழுப்புரம் (189), வேலூர் (152), ராணிப்பேட்டை (118), கள்ளக்குறிச்சி (113), திருப்பத்தூர் (85), திருவண்ணாமலை (81) என்ற எண்களில் தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளன.

எட்டு மேற்கு மாவட்டங்களும் சேர்ந்து 1,366 புதிய தொற்றுகளை பதிவு செய்தன. கோயம்புத்தூரில் 440, சேலம் (300), திருப்பூர் (155), தர்மபுரி (124), கிருஷ்ணகிரி மற்றும் நமக்கல் (123), நீலகிரி (69), ஈரோடு (32) என தொற்றுகள்  பதிவாகியுள்ளன. இந்த மாவட்டங்களில் ஒரு டஜன் இறப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.

கோவையில் மொத்தம் 20,839 தொற்றுகளில் 545 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பினர். அதனால் செயலில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 3,790 ஆகக் குறைந்தது. புதிதாக 2 இறப்பையும் சேர்த்து, அந்த மாவட்டத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 340 ஆக பதிவாகியுள்ளது.

நிஜமான கீரி – பாம்பு சண்டை; மிரள வைக்கும் வைரல் வீடியோ

எட்டு மத்திய மாவட்டங்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் பத்து தென் மாவட்டங்களில் மிகக் குறைந்த இறப்புகள் பதிவாகியுள்ளன. மத்திய மண்டலத்தில் 700 தொற்றுகளும், 12 இறப்புகளும் உறுதியாகியுள்ளன. தெற்கில் 721 தொற்றுகளும், 8 இறப்புகளும் பதிவாகியுள்ளன.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Coronavirus Covid 19
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment