Advertisment

டெல்லி மாநாட்டில் கலந்துக் கொள்ளவில்லை: ஆனாலும் கொரோனா தொற்றால் உ.பி-யில் தமிழர் மரணம்

தப்லீக் ஜமாத்தைச் சேர்ந்த தமிழர்களில் சமீப நாட்களில் ஐந்தாவதாக நூஹு மரணம் அடைந்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Corona, corona virus, Corona live updates

டெல்லியில் நடந்த ஜமாத் பிரச்சாரத்துக்கு சென்ற தமிழர், உத்திரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் நேற்று மரணம் அடைந்தார். இவர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வந்தவர்.

Advertisment

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர் எஸ்.எல்.முகம்மது நூஹு (76). சவுதி அரேபியாவில் கடை நடத்தி வந்தவர். தற்போது அதை மகனிடம் ஒப்படைத்து விட்டு ஓய்வில் உள்ளார். தப்லீக் ஜமாத் சார்பிலான 120 நாள் பிரச்சாரத்திற்காக, மனைவி மற்றும் 2 மகன்களை வீட்டில் விட்டு விட்டு,  ஜனவரி இறுதியில் தன் வீட்டிலிருந்து கிளம்பினார் நூஹூ.

வைரஸாக வந்த நீ, பாடம் புகட்டிவிட்டாய் – வடிவேலுவின் உருக்கமான குரலில் வைரலாகும் வீடியோ

தமிழகத்தின் தென்பகுதி மாவட்டங்களில் 40 நாள் பிரச்சாரம் செய்து விட்டு,  உத்திர பிரதேசத்தின், சம்பலுக்கு மார்ச் 3-ல் வந்துள்ளார். ஜமாத் பிரச்சாரங்களில் இவருடன் மேலும் 10 தமிழர்கள் உடன் இருந்தனர்.

ஆனால் டெல்லி, நிஜாமுதீனில் நடந்த தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு நூஹு செல்லவில்லை. இருப்பினும், மாநாட்டில் இருந்து வந்தவர்களால் நூஹு உள்ளிட்ட 6 பேருக்கு கொரோனா தொற்று பரவியதால், அவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நூஹுவின் உடல்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் பின்னடைவு ஏற்பட்டது.  இதனால், அவர் அருகிலுள்ள பெரிய மாவட்டமான முராதாபாத்தின் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தூத்துக்குடி எம்.பி.யான கனிமொழியும் முராதாபாத் அரசு மருத்துவமனைக்கு தொடர்புகொண்டு நூஹூவின் உடல்நிலை குறித்து தொடர்ந்து, நலம் விசாரித்துக் கொண்டிருந்தார். இதையடுத்து அவசர சிகிச்சைப் பிரிவிலும் அவர் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 9 மணிக்கு நூஹு உயிரிழந்தார். இந்தத் தகவல் சம்பல் மாவட்ட ஆட்சியர் மூலமாக நூஹுவின் குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய நூஹூவின் இளைய மகன், ''கொரோனா ஊரடங்கில் போக்குவரத்து இன்மையால் எனது தந்தையின் உடலை சம்பல் அல்லது அவர் இறந்த முராதாபாத்திலேயே நல்லடக்கம் செய்ய கோர உள்ளோம். இதற்கான கடிதப் போக்குவரத்துகளுக்காக எனது குடும்பத்தார் தமிழகத்தில் காத்திருக்கின்றனர்'' எனத் தெரிவித்தார்.

இதுபோல், தப்லீக் ஜமாத்தைச் சேர்ந்த தமிழர்களில் சமீப நாட்களில் ஐந்தாவதாக நூஹு மரணம் அடைந்துள்ளார். இதில், டெல்லி மாநாட்டிற்கு செல்லாத நிலையிலும் உயிரிழந்த முதல் நபர் நூஹூ தான்.

இதுபோன்ற மரண சம்பவங்களின், மரணம் நிகழ்ந்த மாவட்ட ஆட்சியர் தம் மாநில தலைமைச் செயலாளருக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அளிக்கிறார். இங்கிருந்து அந்தத் தகவல் மரணம் அடைந்தவரின் மாநில தலைமைச் செயலாளருக்கு அனுப்பப்படுகிறது. பிறகு, மருத்துவரின் இறப்புச் சான்றிதழுடன் இறந்தவர் சார்ந்த மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் அளிக்கப்படுகிறது. இந்த ஆட்சியர் மூலமாக சம்பந்தப்பட்ட தாசில்தார் மூலமாக இறந்தவர் குடும்பத்தினருக்குத் தகவல் கூறப்படுகிறது.

சாலையில் காய்கறிகளைக் கொட்டி கொந்தளித்த திருவள்ளூர் விவசாயி: எஸ்.பி நேரில் ஆறுதல்

இதே வழியில் இறந்தவரை நல்லடக்கம் செய்வது குறித்தும் அவரது குடும்பத்தாரின் கடிதமும் போய் சேருகிறது. இதையடுத்து உள்ளூர் முஸ்லிம் இடுகாட்டில் நல்லடக்கம் செய்ய அம்மாநில சன்னி வஃக்பு வாரியத்திடம் அனுமதி பெறப்படும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.

Coronavirus Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment