கொரோனா வைரஸ் விவகாரம் தொடர்பாக, தமிழக மக்கள் பதட்டமோ, பீதியோ அடைய வேண்டாம் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடியோ பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,
‘கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களுக்கு பதட்டமோ, பயமோ, பீதியோ வேண்டாம். அதே நேரத்தில் இது ஒரு தொற்று நோய். காற்றில் இருமல் தும்மலின் மூலம் பரவும் நோய். நாம் கவனமாக இருக்க வேண்டும். அலட்சியப்படுத்தக் கூடாது. காரணம் அண்டை நாட்டில் உள்ளது. தற்போது அண்டை மாநிலத்திலும் ஒருவருக்கு உள்ளது.
தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு : தீவிர கண்காணிப்பில் 68 பேர்....
கொரோனா வைரஸ் என்றால் என்ன... அதன் பாதிப்பு உள்ளிட்ட முழு விபரங்கள் இதோ....
நமது சுகாதாரத்துறை இதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது. பொதுமக்கள் தேவை இல்லாத புரளிகளை பரப்ப வேண்டாம். பொது இடங்கள், வீடு, கோவில், பேருந்து நிலையம், ஷாப்பிங் என வெளியில் சென்று வந்தால் சோப்பு போட்டு கைகளைக் கழுவ வேண்டும்.
20 சதவிகிதம் நோய் இருமல் தும்மல் மூலமாக பரவுகிறது. 80 சதவிகிதம் இருமல், தும்மல் நேரடி தொடர்பு மூலம் பரவுகிறது. சீனாவில் இருந்து வருபவர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் உள்ளது என்ற பார்வை வேண்டாம். மருத்துவர்கள் அனைவரையும் கண்காணிக்கின்றனர் பதட்டம் பீதி வேண்டாம்’ என்று தெரிவித்துள்ளார்.