விநியோக பற்றாக்குறை மற்றும் போக்குவரத்தில் உள்ள சிக்கல்கள் காரணமாக, கோழி, ஆட்டிறைச்சி மற்றும் முட்டையின் விலை அதிகரித்துள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை), கோழி ஒரு கிலோ 200-250 ரூபாய்க்கும், மட்டன் சில்லறை விற்பனையில் ரூ .1,000-1,250-க்கும் விற்கப்பட்டது.
Coronavirus Live Updates : ஊரடங்கில் தளர்வு இல்லை- டெல்லி, தெலுங்கானா, பஞ்சாப் அறிவிப்பு
லாக் டவுன் தொடங்கியபோது, கோழி இறைச்சி மூலம் COVID-19 பரவக்கூடும் என்று வதந்திகள் பரவின. இதன் காரணமாக, அதன் தேவை கடுமையாக வீழ்ச்சியடைந்ததை நாம் கண்கூடாக பார்த்தோம். மேலும் கோழியை தூக்கி வீசக்கூடிய விலையில் விற்க வேண்டியிருந்தது. ”இதன் விளைவாக, அப்போது கோழி உற்பத்தியை பண்ணைகள் நிறுத்திவிட்டன. அதன் தாக்கம் இப்போது உணரப்படுகிறது.” என்று தமிழ்நாடு கோழி பண்ணையாளர்கள் சங்கத்தின் நிறுவனர் ஆர் நல்லதம்பி கூறினார். லாக்டவுனில் தொடக்கத்தில் தீவனத்தை கொடுப்பதில், சிரமங்கள் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், இப்போது உற்பத்தி மீண்டும் தொடங்கிவிட்டது. ஒரு வாரத்திற்குள் விலைகள் சீராகும் எனத் தெரிகிறது. இதன் காரணமாக, முட்டை உற்பத்தியும் கடும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. தமிழகம் ஒரு நாளைக்கு 4.5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்து வந்த நிலையில், தற்போது 2 கோடி முட்டைகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன.
“முட்டையின் தேவையும் குறைந்துள்ளது. சென்னை மக்கள் ஒரு நாளைக்கு 40 லட்சம் முட்டைகளை உட்கொள்வார்கள். லாக்டவுன் தொடங்கியதிலிருந்தே, அதன் தேவை ஏற்ற இறக்கமாக உள்ளது. ஒரு முட்டை ரூ.4-45 க்கு விற்கப்படுகிறது. இது உண்மையில் முட்டை விற்பனைக்கு ஒரு இடைவெளியும் கூட. விலைகள் மேலும் குறைக்கப்படாது.” என சென்னை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் மேலாளர் அசோக் கிஷன் கூறினார்.
சென்னை சமூக நல கூடத்தில் பிறந்தநாள் கொண்டாடிய பீகார் குட்டீஸ் : ஹேட்ஸ் ஆப் கார்ப்பரேசன் ஆபிசர்ஸ்
இதேபோல், தளவாட சிக்கல்கள் காரணமாக மட்டன் விலைகள் உயர்ந்தன. "சில சமயங்களில் காவல்துறையினர் இந்த வாகனங்களை அனுமதிக்காததால், மட்டன் சப்ளையும் குறைந்தது. கோழி விலை உயர்ந்ததால், ஆட்டிறைச்சிக்கான தேவையும் அதிகரித்தது. எனவே, இந்த விலைகளையும் உயர்த்த சந்தை முடிவு செய்தது” என வேளச்சேரியில் இறைச்சி கடையை நடத்தி வரும் ஆர்.ஹமீத் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”