2 நாளில் டாஸ்மாக் வருமானம் ரூ300 கோடி: இதிலும் மதுரைக் காரய்ங்கதான் டாப்!

Tamilnadu tasmac: மதுரை மண்டலத்தில் கடந்த இரு நாட்களில் 69.45 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது. மற்ற மண்டலங்களை ஒப்பிடுகையில் மதுரை மண்டலம் அபார முன்னிலையில் உள்ளது.

Tamilnadu Tasmac News:  தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24ம் இந்திய பொது முடக்கநிலையை அமல்படுத்தி வருகிறது. அதன்விளைவாக, தமிழகத்தில் செயல்பட்டு வந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

பொருளாதார மற்றும் இதர செயல்பாடுகள் அதிகரிக்கும் நடவடிக்கையை தொடங்கும் ஒரு பகுதியாக நாட்டில் மதுக்கடைகள் மே – 4ம் தேதியில் இருந்து இயங்க இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. எனினும், மதுக்கடைகள் திறக்க வேண்டாம் என்று ஒரு மாநில அரசு கருதினால் இந்த தேசிய வழிகாட்டுதல்களை புறக்கணிக்க முடியும்.

மதுபானக் கடைகளை திறப்பதில் ஏன் இந்த ஆர்வம் ? திமுக கூட்டணி போராட்டம்

எனவே, தமிழகத்தில் கொரோனா ஆபத்தை கருத்தில் கொண்டு மூன்றாவது பொது முடக்கநிலை முடியும் வரை( மே- 17) தமிழக அரசு மதுக்கடைகளை திறக்காது என அனைவரும் கருதி வந்தனர்.

இந்நிலையில்,கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் உள்ள மதுக்கடைகளுக்கு தமிழக எல்லை பகுதியில் உள்ள மக்கள் அதிக அளவில் செல்வதால் மாநிலங்களுக்கு இடையேயான மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்படுவதாக கூறி தமிழக அரசு மே 7 முதல் தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவித்தது.

மதுக்கடைகள் எங்கு இயங்கும்? எங்கு இயங்காது?

மேலும்,சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் நாளை திறக்கப்படாது. இந்த கடைகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தது.

மது விற்பனை வருவாய் அமோகம்:

சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மதுக்கடைகளைத் தவிர்த்து நேற்று முன்தினம் 3,700 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. மதுவிற்பனை மூலம் தமிழக அரசுக்கு கடந்த 2 நாட்களில் சுமார் 300 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் இன்று திறப்பு : அவரவர் வயதுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே மது வாங்கலாம்

கடந்த இரண்டு நாட்களாக திருச்சி மண்டலத்தில் 63.17 கோடியும், காஞ்சிபுரம் திருவள்ளுவர் மாவட்டங்களில் 43.28 கோடியும், கோவை மண்டலத்தில் 54.01 கோடியும், சேலம் மண்டலத்தில் 62.09 கோடியும், மதுரை மண்டலத்தில் 69.45 கோடியும் மது விற்பனை ஆகியுள்ளது. எனவே, இந்த இரண்டு நாள் விற்பனையில் மதுரை மண்டலம் அபார முன்னிலையில் உள்ளது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Coronavirus lockdown madurai zone top in two day liquor sales online liquor

Next Story
துபாய் டூ சென்னை சிறப்பு விமானம்: ஸ்கிரீனிங்கிற்கு பிறகு குவாரண்டைனில் பயணிகள்Vande bharat mission, uae to chennai special flights
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com