”கொரோனா காய்ச்சலடி… ஊரெல்லாம் பேசுதடி” – கானா பாடல் மூலம் செம்ம விழிப்புணர்வு

பாட்டு கேக்கனும் தான்… ஆனா அதைவிட முக்கியம் கைகளை கழுவுறது தான்… பாட்டை கேட்டுட்டே போய் கைய கழுவுங்க பாஸ்

Coronavirus outbreak awareness through Tamil kana Song
Coronavirus outbreak awareness through Tamil kana Song

Coronavirus outbreak awareness through Tamil gana Song : வாசகர்களுக்கு வணக்கம். தொடர்ந்து கொரோனா பற்றி பேசிக் கொண்டிருப்பதே மன சோர்வினை அளிக்கும் என்று எங்களுக்கும் தெரியும். ஆனாலும் என்ன செய்ய, ஆங்காங்கே மத்திய அரசு,  மாநில அரசுகள் மக்களுக்கு விழிப்புணர்வினை வழங்கி வருகிறது. ஆனாலும் பொதுமக்கள், சமூக ஊடகங்களில் பரவும் தவறான செய்திகளை ஃபாலோ செய்து தேவையில்லாத பிரச்சனையில் மாட்டிக் கொள்கின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

இது வரையிலும் கொரோனாவிற்கு தடுப்பு மருந்து ஏதும் கண்டறியப்படவில்லை. மாறாக வரும் முன் தடுப்பதே நலம் என்பதையும், காய்ச்சலை குறைப்பதற்கான மருந்துக்களையும் தான் பயன்படுத்தி வருகிறது. இஞ்சிக் கசாயம், மஞ்சள், மிளகு, நிலவேம்புக் கஷாயம் என எல்லாம் உடலுக்கு நல்லது தான். ஆனால் கைகளை கழுவுதலும், பொதுவெளி நடமாட்டங்களை குறைத்தலும் தான் தற்போதைக்கான தீர்வாக இருக்கும் என்று அனைவரும் நம்புகின்றனர். எனவே தேவையற்ற வதந்திகளை நம்பாதீர்கள்.

ஆனா, இந்த நியூஸ் அத பத்தினது கிடையாது. கொரோனாவை சாக்காக வைத்து, மீம்ஸ் போட்டு, பாட்டுப்பாடி, வைரல் ஹிட் அடிக்கலாம் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஏதோ மனசுக்கு ரிலாக்ஸா இருக்குன்னு இன்னைக்கு பாத்த வீடியோ தாங்க இது. அஞ்சாதே படத்தில் வரும் “கண்ணதாசன் காரைக்குடி” பாட்டு மெட்டை அப்படியே பயன்படுத்தி இந்த பாட்டை யாரோ பாடிருக்காங்க.  கேக்கவும் நல்லாதான் இருக்கு.  நீங்களும் இந்த பாடலை எஞ்சாய் பண்ணுங்க. ஆனால் மக்களே கைகளை சோப்பு போட்டு கழுவ மறந்துடாதீங்க.

மேலும் படிக்க :10 பக்க அளவிற்கு மரண அறிவிப்புகள் : இத்தாலியை கலங்கடித்த கொரோனா

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Coronavirus outbreak awareness through tamil gana song

Next Story
ஹாய் கைய்ஸ் : கொரோனா ரொம்ப பரவியிட்டு இருக்கு ; சூதானமா இருந்துக்கோங்க நட்’பூ’ஸ்…corona virus, tirumala tirupati, anna university, chennai, central station, metro rail station, lakshmi menon, kollywood, director muthiah, komban, kuttipuli
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com