/tamil-ie/media/media_files/uploads/2020/04/b568.jpg)
Coronavirus outbreak in India State wise breakup Kerala exits top 10 list : இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,500-ஐ கடந்தது. அதே நேரத்தில் கொரோனா நோயில் இருந்து முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதுவரையில் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
முதல் 10 இடங்களுக்கான பட்டியலில் இடம் பெற்றிருக்கும் மாநிலங்கள் இங்கே. மகாராஷ்ட்ராவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6500-ஐ எட்டியுள்ளது. பட்டியலில் முதல் இடத்தில் அம்மாநிலம் தான் உள்ளாது. அதனை தொடர்ந்து குஜராத்தில் 2600க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தலைமை நிர்வாக பொறுப்பு – இந்தியாவுக்கு கவுரவம்
குஜராத் 2வது இடத்திலும், டெல்லி மூன்றாம் இடத்திலும், ராஜஸ்தான் நான்காம் இடத்திலும், மத்திய பிரதேசம் 5ம் இடத்திலும் உள்ளது. இதுவரை 2வது இடத்தில் இருந்து வந்த தமிழகம் 6வது இடத்திற்கு வந்துள்ளது. சிறப்பான முறையில் கொரோனாவுக்கு எதிராக பணியாற்றி வரும் கேரளம் டாப் 10 பட்டியலில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.