2 வாரத்துக்கு மதுரைல மட்டன் கோலாவும் இல்ல, தோசையும் இல்ல… புதிய தடை உத்தரவு

இறைச்சியால் கொரோனா நோய் பரவுவதில்லை. ஆனால் இறைச்சி வாங்க ஆயிரக் கணக்கானோர் குவிவது ஆபத்து தான்!

Madurai butchery shops wont function till 14th April
Madurai butchery shops wont function till 14th April

Madurai Butchery shops wont function till 14th April : கொரோனா நோய் வேகமாக பரவி வருவதால் பொது இடங்களில் மக்கள் அதிக அளவில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் மதுரையில் உள்ள நெல்பேட்டை இறைச்சி சந்தைகளில் இறைச்சி வாங்க பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனார்.

ஆட்டிறைச்சி, கோழி மற்றும் மீன் ஆகியவற்றை வாங்க ஆயிரக்கணக்கான பேர் குவிந்ததால் கொரோனா மிகவும் வேகமாக பரவ வாய்ப்புகளை மக்கள் உருவாக்கியுள்ளனர். மக்களின் நலனை கருத்தில் கொண்ட மதுரை நகர் ஆட்டிறைச்சி சில்லரை வியாபாரிகள் சங்கத்தினர் முக்கியமான முடிவை ஒன்றினை எடுத்துள்ளனர்.

மேலும் படிக்க : மருத்துவர்கள் பரிந்துரைப்படி மது விற்பனை – கேரள அரசின் உத்தரவுக்கு தடை

அதன்படி வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வரை மதுரையில் ஆட்டு இறைச்சி விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகராட்சி ஆணையர் ஆகியோரின் உத்தரவுப்படியும், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் ஆலோசனையின் படியும், கொரோனா நோயில் இருந்து மக்களை காக்க ஏப்ரல் 14ம் தேதி வரை அனைத்து இறைச்சி கடைகளும் மூடப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இறைச்சியால் கொரோனா நோய் பரவுவதில்லை. முறையாக சமைத்து சாப்பிட்டால் எந்த ஆபத்தும் இல்லை என்று தான் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில், ஒரே நாளில் கூடுவது மிகப் பெரிய விளைவினை ஏற்படுத்தக் கூடும் என்பதை உணர்ந்து செயல்படுவோம் மக்களே.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil”

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Coronavirus outbreak madurai butchery shops wont function till 14th april

Next Story
தமிழகம் முழுவதும் இன்று பந்த்…! வெற்றிப் பெறுமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com