/tamil-ie/media/media_files/uploads/2020/05/EWvtTMUXsAIRUzc-horz.jpg)
Coronavirus outbreak Ondrinaivom Vaa ADMK cadre wrote letter to MK Stalin
கொரோனா வைரஸூக்கு எதிரான போரில் அரசியல் தலைவர்கள் பலரும் களத்தில் இறங்கி பொதுமக்களுக்கு தங்களால் ஆன உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் முக ஸ்டாலின் தலைமையில் செயல்படும் ”ஒன்றிணைவோம் வா” திட்டம் மூலமாக பொதுமக்கள் பலருக்கும் பல்வேறு நலத்திட்டங்களை திமுகவினர் செய்து வருகின்றனர். ஈரோட்டில் திமுகவின் நலத்திட்டத்தை பெற்ற அதிமுக உறுப்பினர் ஒருவர் முக ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
மேலும் படிக்க : ஐ.இ. தமிழ் முகநூல் நேரலை : இன்று மாலை 05 மணிக்கு நம்முடன் ஆர்.ஜே. விக்னேஷ்காந்த்
அதில், உங்களின் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் பயன்பெற்ற ஆயிர கணக்கானவர்களின் நானும் ஒவருன். நான் அதிமுக கட்சியை சேர்ந்தவர். ஆனாலும் அரசின் ரூ. 1000-மும், ரேசன் அரிசியும் போதுமானதாக இல்லை. ஈரோட்டிலும் உங்களின் கட்சி நிலைத்து செயல்பட வேண்டும் என விரும்புவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதத்தை மேற்கோள் காட்டிய முக ஸ்டாலின் தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், இந்த கடிதம் என்னை நெகிழ்ச்சி அடைய செய்கிறது. ஒன்றிணைவோம் வா என்ற திட்டமே சாதி, மதம், கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மக்களுக்கு தொண்டு செய்வது தான். இது மேலும் தொடரும் என்று முக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க : சென்னையில் கொரோனா அதிகரிப்பு: அரசு எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.