Coronavirus outbreak Visit Vandalur Zoological Park via online live streaming : கொரோனா தாக்கதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகின்றனர். ஆன்லைனில் வேறென்ன செய்து பொழுதுபோக்குவது என்று தெரியாமல் திணறி வருகின்றார்கள். சிலர் நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார், மற்றும் அமேசான் ப்ரைம் என்று தங்களுக்கான நேரத்தை ஒதுக்கிக் கொள்கின்றனர். குழந்தைகள் இருக்கும் வீடுகளில் இன்னும் சிக்கல் தான்.
மேலும் படிக்க : வீட்டுக்குள் மனிதர்கள்… தெருக்களில் விலங்குகள்… இயற்கை கற்பிக்கும் பாடம் புரிகிறதா?
தற்போது உங்களால் பூங்காவுக்கு செல்ல முடியும் என்றால் என்ன செய்வீர்கள்? அதுவும் வண்டலூர் மிருககாட்சி சாலையை பார்க்க உங்களால் முடியும் என்று கூறினால் என்ன செய்வீர்கள்? வெளியுலகை காணவேண்டும் என்ற ஆசை உங்களுக்கு வருகிறதா? தற்போது நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது ஒன்று மட்டும் தான்.
https://www.aazp.in/live-streaming/ என்ற இணையத்திற்கு நேராக செல்லுங்கள். அங்கு உங்களால், வண்டலூர் ஜூவில் இருக்கும் சிங்கம், காட்டு மாடு, மனித குரங்கு, சிங்கவால் குரங்கு, யானை, வெள்ளை புலி, வங்கப் புலி, சிறுத்தை, முதலைகள், நீலகிரி கருங்குரங்கு, கரடி, நீர்யானை உள்பட 16 விலங்குகளின் செயல்பாட்டினை லைவ்-வாக காண முடியும்.
இந்த விலங்குகள் அனைத்திற்கும் பகல் 12 மணியில் இருந்து மாலை 4 மணி வரை ஷவர் செய்து, உணவுகள் வழங்கப்படும். இதனை நீங்கள் லைவ்வாக பார்த்து ரசிக்க முடியும். கடந்த வாரம் மட்டும் நான்காயிரம் முதல் 6 ஆயிரம் நபர்கள் இந்த வசதியை கொண்டு ஆன்லைனில் வண்டலூரில் இருக்கும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவை கண்டு ரசித்துள்ளனர். மக்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் இருக்க இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது பூங்கா நிர்வாகம்.
வண்டலூர் பூங்காவில் உள்ள விலங்குகளை நேரில் வந்து பார்க்க இயலாத பார்வையாளர்கள் ஆன்-லைன் மூலம் நேரடியாக (Live Streaming) பார்க்கும் புதிய வசதி கடந்த 2018ம் ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.