/tamil-ie/media/media_files/uploads/2020/04/maxresdefault-1.jpg)
coronavirus Puducherry Lockdown relaxation hotels start to function from today
coronavirus Puducherry Lockdown relaxation hotels start to function from today : ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு தளர்வுகள் குறித்த முடிவினை மாநில அரசுகளே மேற்கொள்ளலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியிருந்தது. இந்நிலையில் இன்று புதுவையில் உணவகங்கள் செயல்பட துவங்கியுள்ளன.
பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் புதுவை அரசின் கூட்டுறவு நிறுவனத்தின் கீழ் இயங்கும் இந்தியன் காஃபி ஹவுஸ் அனைத்து கிளைகளிலும் இன்று திறக்கப்பட்டுள்ளது. உணவுகள் முறையாக தயார் செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் முகக்கவசம் அணிந்திருப்பவர்களுக்கு மட்டுமே உணாவு பார்சல்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : அமெரிக்காவில் கச்சா எண்ணெய் வாங்குவோருக்கு பணம்! ஏன் இந்த நிலைமை?
ஏழை மக்களுக்காக ரூ.10-க்கு நான்கு சப்பாத்திகள்
புதுவையில் உள்ள ஏழை மக்கள் பசியால் வாடக் கூடாது என்ற பொது நோக்கில் நடமாடும் உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளது. அன்ன பிரதோஷன சேரிட்டபிள் ட்ரஸ்ட் என்று அழைக்கப்படும் அந்த உணவகம் ரூ. 10-க்கு நான்கு சப்பாத்திகளை ஏழைகளுக்கு விற்பனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.