சென்னையில் அதிகரித்து வரும் தொற்று; சிகிச்சை தர தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி

நோய் அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளை அரசு சிகிச்சை மையங்களில் சோதனை செய்ய பரிந்துரைப்பதை நாங்கள் ஊக்குவிக்கின்றோம் என்று கூறினார்.

coronavirus, chennai news, tamil news, tamil nadu news

coronavirus second wave chennai : சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், லேசான அறிகுறிகளுடன் இருக்கும் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க தனியார் அமைப்புகள் கொரோனா தடுப்பு மையத்தை உருவாக்க அனுமதி வழங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. தனியார் ஹோட்டல்கள் மற்றும் சொந்தமாக இடம் வைத்திருக்கும் நபர்களுடன் கூட்டணி வைத்து தனியார் மருத்துவமனைகள் கொரோனா தடுப்பு மையத்தை நடத்த சென்னை மாநகராட்சியுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் 12000க்கும் மேற்பட்ட படுக்கைகள் இருக்கின்றன. 1487 படுக்கைகளில் நோயாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இருப்பினும் நாள் ஒன்றுக்கு 3700க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு ஆளாவதால் நாளடைவில் படுக்கை வசதிகளுக்கான தேவை அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநகராட்சி ஆணையர் ஜி. பிரகாஷ் தனியார் நிறுவனங்கள் கோவிட் சிகிச்சை மையத்தை நடத்த அனுமதி வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க : கொரோனா தடுப்பூசி மூலப்பொருட்கள்: அமெரிக்காவை சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு ஏன்?

coronavirus second wave chennai

குறைந்த நேரத்தில் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தரவும், மருத்துவ உள்கட்டமைப்பு மீதான அழுத்தத்தை குறைக்கவும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று கூறிய பிரகாஷ் அரசு சேவை மையங்களில் வழங்கப்படும் சிகிச்சை முற்றிலும் இலவசமானது என்றும் ஆனால் தனியார் துறையின் கட்டணங்களை ஒழுங்குமுறை செய்யவில்லை என்றும் கூறியுள்ளார். தனிநபர்களின் தேர்வு அடிப்படையிலும், சந்தை விலை நிர்ணய அடிப்படையிலும் தான் அது அமையும் என்று அவர் கூறினார். தனியார் சிகிச்சை மையங்கள் எவ்வளவு உருவாகும் என்பதை பொறுத்திருந்து தான் காண வேண்டும் என்று அவர் கூறினார்.

சென்னை மாநகர சுகாதார இணை ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், நோய் அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளை அரசு சிகிச்சை மையங்களில் சோதனை செய்ய பரிந்துரைப்பதை நாங்கள் ஊக்குவிக்கின்றோம் என்று கூறினார். உங்களுக்கு அறிகுறிகள் இருந்தால் காய்ச்சல் தொடர்பான கணிப்பை நடத்தும் பணியாளருக்கு நீங்கள் தகவல் தெரிவியுங்கள். அவர் உங்களுக்கு தேவையான சோதனைகள் குறித்து அவர் விளக்குவார் என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க : கொரோனா இரண்டாம் அலை: ஆக்ஸிஜன் தேவை அதிகம்; இறப்பு விகிதத்தில் மாற்றம் இல்லை

தனியார் மருத்துவமனைகளுடன் இணையும் தனியார் ஹோட்டல்கள் உரிமம் பெற வேண்டிய தேவை இல்லை. ஹோட்டல்களில் இருந்தே பணியாற்றும் மருத்துவக் குழுக்கள் இருந்தால் போதும் என்று அவர் கூறியுள்ளார் பிரகாஷ். பொதுமக்கள் சோதனை முகாம்கள் அல்லது ஆரம்ப சுகாதார மையங்களுக்கு சென்று தங்களை சோதித்துக் கொள்ளலாம் அல்லது பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து மாநகராட்சியின் கொரோனா தடுப்பு மையங்களில் சோதனைகளை மேற்கொள்ளலாம் என்று கூறியுள்ளார் ஜான் வர்கீஸ்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Coronavirus second wave chennai corporation to permit private centers

Next Story
News Highlights: உடல் வலி, சளி, அஜீரணம் இருந்தால் உடனே பரிசோதனை செய்க- எய்ம்ஸ் மருத்துவர்கள்Tamilnadu covid -19 case Tamil News: 52 MBBS students from Kancheepuram college test positive
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com