corona virus. Corona virus tamil news, ஊரடங்கு தளர்வு, தமிழக அரசு, கொரோனா வைரஸ், கொரோனா தமிழ் news, கொரோனா தமிழ்நாடு Corona virus news in tamil, corona virus tamil nadu news, coronavirus today news in tamil, coronavirus Latest news in tamil, coronavirus Tamil nadu news, coronavirus chennai news, Corona virus outbreak, corona virus pandemic, corona virus symptoms
கோவிட் -19 கேஸ்களின் அடிப்படையில் மத்திய சுகாதார அமைச்சகம் நாடு முழுவதும் பல மண்டலங்களை ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களாக மாற்றியுள்ளது. இப்போது சிவப்பு மண்டலத்தில் 130 மாவட்டங்களும், பசுமை மண்டலத்தில் 319 மாவட்டங்கள் உள்ளன.
COVID-19 கொரோனாவா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் இல்லாவிட்டாலும், அல்லது தொடர்ந்து 21 நாட்களில் குறிப்பிட்ட மாவட்டத்தில் புதிய வழக்குகள் எதுவும் தெரிவிக்கப்படாவிட்டாலும், அந்த மாவட்டம் பசுமை மண்டலமாக அறிவிக்கப்படும்.
தமிழ்நாட்டில், குறைந்தது 13 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. நிர்ணயிக்கப்பட்ட 14 நாட்களில் இங்கு புதிய தொற்றுகள் இல்லை. ஆக மொத்தம் ஆரஞ்சு மண்டல மாவட்டங்களின் எண்ணிக்கையை இப்போது 24. இருப்பினும் மாநில தலைநகர் சென்னை சிவப்பு மண்டலத்திலேயே உள்ளது.
Advertisment
Advertisement
இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் பிரீத்தி சுதான், “ நாங்கள் அடையாளப்படுத்தியுள்ள அதிகம் கவனம் செலுத்த வேண்டிய மாவட்டங்களில் தீவிரக் களப்பணியும், கண்காணிப்பும் அவசியம். கரோனா நோயாளிகள் எண்ணிக்கையைப் பொறுத்து, இரட்டிப்பாகும் விதத்தி்ன் அடிப்படையில் ஹாட்ஸ்பாட், சிவப்பு, பச்சை, ஆரஞ்சு மண்டலங்கள் முன்பு பிரிக்கப்பட்டன.
கொரோனாவிலிருந்து குணமடைவோர் எண்ணி்க்கையை அடிப்படையாக வைத்து மண்டலங்கள் மாற்றப்பட்டுள்ளன. கடந்த 21 நாட்களாக எந்தவிதமான கொரோனா நோயாளிகளும் புதிதாக உருவாகாமல் இருக்கும் மாவட்டங்கள் பச்சை மண்டலங்களில் கொண்டுவரப்பட்டுள்ளது” என அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மத்திய அரசு மாவட்டங்களை மண்டல வாரியாக பிரிப்பதில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதாவது, ஒவ்வொரு மாவட்டத்திலும் சுகாதாரத்துறை நடவடிக்கை, பரிசோதனை நிலவரம், குணமடைவோர் விகிதம், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு மண்டலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. சிவப்பு மண்டலங்களில் 7 நாட்களில் புதிய தொற்று இல்லாத காரணத்தினால் அவைகள் தற்போது ஆரஞ்சு மண்டலமாக மாற்றப்பட்டுள்ளன.
சிவப்பு மண்டலம்
சென்னை, மதுரை, நாமக்கல், தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர், ராணிப்பேட்டை, விருதுநகர், திருவாரூர், வேலூர் காஞ்சிபுரம் ஆகிய 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்திலேயே உள்ளன. மேலும், 24 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்களாகவும், ஒரு மாவட்டம் பச்சை மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்சு மண்டலம்
தேனி, தென்காசி, நாகப்பட்டினம், திண்டுக்கல், விழுப்புரம், கோயம்புத்தூர், கடலூர், சேலம், கரூர், தூத்துக்குடி, திருச்சி, திருப்பத்தூர், கன்னியாகுமரி, திருவண்ணாமலை, ராமநாதபுரம், திருநெல்வேலி, நீலகிரி, சிவகங்கை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், ஈரோடு, புதுக்கோட்டை மற்றும் தர்மபுரி ஆகியவை ஆரஞ்சு மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இதுவரை எந்த வழக்குகளும் இல்லாததால், தமிழகத்தின் ஒரே மாவட்டமான கிருஷ்ணகிரி பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு தமிழகத்தில் 26 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”