யூடியுப் வீடியோவை பார்த்து ஏடிஎம் மெஷினை உடைக்க முயற்சி: இளைஞர் கைது

கொரோனா வைரஸால் ஏராளமானோர் வேலை இழந்து உணவிற்காக திண்டாடி வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் ஏராளமானோர் வேலை இழந்து உணவிற்காக திண்டாடி வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus young man lost job and tried to loot in ATM

coronavirus young man lost job and tried to loot in ATM

coronavirus young man lost job and tried to loot in ATM : கொரோனா வைரஸின் பரவலை குறைக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு 40 நாட்களுக்கு தரப்பட்டுள்ளது. இந்நிலையில் பலர் வேலை இழந்து திண்டாடி வருகின்றனர். கொரோனா வைரஸால் வேலை இழந்த நபர், ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை அடிக்க முயற்சி செய்து, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

விழுப்புரம் மாவட்டம் ஆதிச்சனூர் பகுதியை சார்ந்தவ்ர் பிரபு என்கிற அப்பு. புதுச்சேரி பேக்கரி ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார் அவர். கொரோனா வைரஸால் கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் வேலை ஏதும் இல்லாமல் தவித்து வந்துள்ளார் அந்த இளைஞர். கையில் இருந்த பணம் தீர்ந்து போனதால் பணத்தினை திருட முடிவு செய்துள்ளார். ஏ.டி.எம்மில் கொள்ளை அடிக்க முடிவு செய்த அவர் யூடுயூப் வீடியோக்கள் சிலவற்றை பார்த்துள்ளார். பிறகு கையில் அரிவாள், கிக்கர் ஸ்டார்ட்டர் ஆகியவற்றுடன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் படிக்க : ”மீண்டும் வீட்டுக்கு வரவேண்டும்”… மகளின் ஆசையை நிறைவேற்றாத மருத்துவரின் இறுதி குறுஞ்செய்தி!

Advertisment
Advertisements

புதுச்சேரி நகரின் மையத்தில் அமைந்திருக்கும் சுய்ப்ரே வீதியில் பாரத வங்கியின் தலைமை அலுவலகம் உள்ளது. கடந்த 12-ஆம் தேதி இரவு அங்குள்ள ஏ.டி.எம். மையத்துக்கு சென்ற அவர் ஏ.டி.எம் மெஷினை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார். முன் கதவை மட்டும் திறந்த அவரால் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைக்க முடியவில்லை. ஆனால் எ.டி.எம். இயந்திரத்தில் வைக்கப்பட்ட அலாராம் வீறிட்டு கத்த துவங்கியது. அச்சமடைந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். வங்கியில் இருக்கும் சி.சி.டி.வி. கேமிரா பதிவை வைத்து விசாரணை மேற்கொண்டனர் காவல்துறையினர்.விசாரணை முடிவில் பிரபு தான் இந்த காரியத்தில் ஈடுபட்டார் என்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவருடைய இருசக்கர வாகனம் முதலியவற்றை பறிமுதல் செய்து, இளைஞரையும் சிறையில் அடைத்துள்ளனர் காவல்துறையினர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: