பழம்பெரும் நடிகை பானுமதி பெயரில் உருவாகியுள்ள இணையதள திரைப்படத்துக்கு தடைக்கோரி அவரது மகன், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
நமீதா, கெளதமி, மதுவந்தி, குட்டி பத்மினிக்கு பாஜக-வில் புதிய பதவி!
இந்த வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த இணையதள திரைப்படத்தின் தலைப்பை மாற்றும்படி தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தியதுடன், இந்த படம் முன்னாள் நடிகை பானுமதியின் வாழ்க்கை வரலாறு அல்ல என்பதையும் உறுதி செய்தது. பானுமதி - ராமகிருஷ்ணா தம்பதியின் மகன் டாக்டர் பரணி ஆர் பலுவால் தாக்கல் செய்த மனுவை நீதிபதி என் சதீஷ்குமார் விசாரித்தார். அப்போது, “பானுமதி ராமகிருஷ்ணா” என்ற தலைப்பை எந்த வகையிலும் பயன்படுத்துவதைத் தடுக்க நிரந்தர தடை உத்தரவு கோரினார் பரணி.
இந்த இணையதள திரைப்படத்தின் தலைப்பு, அல்லது வரவிருக்கும் வேறு எந்தவொரு படத்திலும், நடிகை பானுமதியின் பெயரை பயன்படுத்தினால், அது அவரை தவறாக சித்தரிக்கக்கூடும் என மனுதாரர் வாதிட்டார். அதோடு தனது தாயின் பெயரை அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத்துவதால், தனக்கு உடல் மற்றும் மன வேதனையை ஏற்பட்டிருப்பதாகவும், அதற்கு ரூ.1 கோடி இழப்பீடு தர வேண்டும் எனவும் பானுமதியின் மகன் பரணி தெரிவித்தார்.
மனைவியுடன் யோகிபாபு… பார்க்கவே எவ்வளவு நல்லா இருக்குல!
திரைப்படத்தின் ஆரம்பத்தில் மறுப்பு தெரிவிப்பதுடன், “பானுமதி & ராமகிருஷ்ணா” என்ற பெயரை மாற்ற தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஸ்ரீகாந்த் நாகோதி இயக்கியுள்ள இந்த தெலுங்கு படம் இன்று காலை இணையத்தில் வெளியாகியுள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”