/tamil-ie/media/media_files/uploads/2020/07/a42-2.jpg)
இறந்த 33 அரசு பணியாளர்களில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 18 பேரும் அடக்கம்
மாநிலம் முழுவதும் COVID-19 க்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட அரசு பணியாளர்களில் இதுவரை குறைந்தது 33 பேர் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டனர்.
இந்த நபர்களின் பட்டியலில், கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷனைச் சேர்ந்த 11 பேரும், காவல் துறையைச் சேர்ந்த எட்டு பேரும், சுகாதாரத் துறையைச் சேர்ந்த மூன்று பேரும், டவுன் பஞ்சாயத்துகளைச் சேர்ந்த பணியாளர்களும் அடங்குவர்.
பக்ரீத் பண்டிகை: சென்னையில் ஒட்டகங்கள் பலியிட தடை
இறந்தவர்களில் ஒருவர் முதலமைச்சர் அலுவலகத்தில் மூத்த தனிச் செயலாளராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் அறிவித்தபடி, உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிவாரணத் தொகையாக, ரூ.50 லட்சம் வழங்குவதற்காக, இறந்த இந்த 33 பேர் குறித்த முழு தகவல்களை வருவாய் துறையிடம் கோரியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
“இது முழுமையான பட்டியல் அல்ல. வருவாய்த்துறை அளிக்கும் கூடுதல் விவரங்களை பொறுத்து எண்ணிக்கை அதிகரிக்கலாம்" என்றார்.
மும்மொழிக் கொள்கைக்கு இங்கு இடமில்லை: திமுக மாவட்டச் செயலாளர்கள் தீர்மானம்
இறந்த 33 அரசு பணியாளர்களில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 18 பேரும், காஞ்சீபுரம் மற்றும் விருதுநகரில் இருந்து தலா மூன்று பேரும், செங்கல்பட்டு, திருவள்ளூரைச் சேர்ந்த தலா இரண்டு பேரும், கடலூர், சேலம், தஞ்சாவூர், திருச்சி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த தலா இரண்டு பேரும் அடக்கம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.