Advertisment

மணலியில் கொரோனா தொற்று அதிகரிப்பு: தண்டையார்பேட்டை, ராயபுரத்தைவிட கூடியது

சமீபத்திய புள்ளிவிவரங்கள், கடந்த ஏழு நாட்களில், மணலி மண்டலத்தில் தொற்றுகள் 3.7% அதிகரித்துள்ளன என்பதைக் காட்டுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus, covid 19, corona in manali

கொரோனா வைரஸ்

ராயபுரம், தண்டையார்பேட்டை மற்றும் திரு.வி.க நகர் ஆகியவை கொரோனா தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்தே அதிக கோவிட் -19 தொற்றை பதிவு செய்தது. அதனால் சென்னை பெருநகர மாநகராட்சி அதிகாரிகளின் இந்த மூன்று மண்டலங்களையும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

Advertisment

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாய் ; மரணமடையும் தருணத்தை ஜன்னல் வழியே பார்த்த மகன்!

எவ்வாறாயினும், மாநகராட்சியால் பகுப்பாய்வு செய்யப்பட்டதில், பொது சுகாதார முயற்சிகள் வட சென்னையில் மணாலி மீது அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்பது தெரிய வந்துள்ளது. இது மற்ற மண்டலங்களுடன் ஒப்பிடும்போது குறைந்த தொற்று எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. கடந்த வார நிலவரப்படி, ஒரு லட்சம் மக்களுக்கு நேர்மறையான வழக்குகளின் அடிப்படையில், மணாலி ‘சிவப்பு’ மண்டலமாக இருந்தது. மணாலிக்கான இந்த மெட்ரிக் 1,404 ஆகவும், ராயபுரத்தின் எண்ணிக்கை 1,303 ஆகவும் இருந்தது. தண்டையார்பேட்டையின் மெட்ரிக் எண்ணிக்கை 1,222.

மணலி 42.33 சதுர மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் மண்டலமாகும். இங்கு சுமார் 1.3 லட்சம் மக்கள் வாழ்கின்றனர்.  அதே நேரத்தில் ராயபுரத்தில் சுமார் 7 லட்சம் மக்கள் ஒரே பகுதியில் வாழ்கின்றனர்.

மாநகராட்சி புள்ளிவிவரங்களின் படி, ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு செயலில் உள்ள தொற்றுகளாக எடுத்துக் கொண்டால், மணலியின் எண்ணிக்கை 263. இது கோடம்பாக்கத்தின் 288-க்கு அடுத்த இடத்தில் உள்ளது. இது ஒரு மாறுபட்ட எண்ணாக இருந்தாலும், மண்டலத்தில் தொற்றுகள் அதிகரித்து வருவதாகவும், அவற்றை கட்டுப்படுத்த, வலுவான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாகவும் மணலியின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மாநகராட்சியின் சமீபத்திய புள்ளிவிவரங்கள், கடந்த ஏழு நாட்களில், மணலி மண்டலத்தில் தொற்றுகள் 3.7% அதிகரித்துள்ளன என்பதைக் காட்டுகிறது.

சென்னையில் உள்ள தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தின் தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் பி கணேஷ்குமார், ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு மெட்ரிக் நிகழ்வுகள் பயனுள்ளதாக இல்லை. ஆனால் ஸ்டேடர்ஜியை திட்டமிட பொது சுகாதார நிபுணர்களுக்கு ஒரு யோசனை கொடுக்க உதவுகிறது, என்றார்.  "அனைத்து மண்டலங்களிலும் சோதனை ஒரே மாதிரியாக இருக்கிறதா என்று ஒருவர் சரிபார்க்க வேண்டும்," என்றும் அவர் கூறினார்.

கிரேந்திப் பூ, மஞ்சள்… மலர்ச்சியான முகம் கியாரன்டி!

ஜூலை 20-ம் தேதி வரை மணலியில் 355 முகாம்கள் மட்டுமே நடத்தப்பட்டிருந்தாலும், ஒரு முகாமுக்கு சராசரியாக 76 பேர் கலந்துக் கொண்டனர். இது அனைத்து மண்டலங்களை விடவும் மிக உயர்ந்தது என்று மாநகராட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. மணலியில் காய்ச்சல் முகாம்கள் அதிக மக்களை ஈர்க்கின்றன.

நன்றி - டைம்ஸ் ஆஃப் இந்தியா 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Coronavirus Covid 19
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment