/tamil-ie/media/media_files/uploads/2020/04/corona-cases-in-india.jpg)
corona cases in india
Coronavirus in Tamil Nadu: இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் 834 பேர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். மொத்தம் 34 மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் இருக்கிறது.
கொரோனா நிவாரணம்: அரசு சலுகையை அப்படியே வழங்கும் ஹெச்.டி.எஃப்.சி வங்கி
முதன்மையாக சென்னையில் 163 பேருக்கும், கோயம்புத்தூரில் 60 பேருக்கும், திண்டுக்கல்லில் 46 பேருக்கும், திருநெல்வேலியில் 56 பேருக்கும், ஈரோட்டில் 58 பேருக்கும், திருச்சியில் 36 பேருக்கும், நாமக்கல்லில் 41 பேருக்கும், இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக ராணிப்பேட்டையில் 27, செங்கல்பட்டில் 28, மதுரையில் 25, கரூரில் 23, தேனியில் 40, தூத்துக்குடியில் 22, விழுப்புரத்தில் 30, திருப்பூரில் 26, கடலூரில் 13, சேலத்தில் 14, ஆகிய எண்ணிக்கைகளில் இந்த வைரஸின் தாக்கம் உள்ளது.
District wise report of #TNCoronaUpdate#COVIDー19pic.twitter.com/awKIxUAZ0S
— Karthik journalist (@KKarthik589) April 9, 2020
திருவள்ளூர், திருவாரூர், ஆகிய மாவட்டங்களில் தலா 13 பேருக்கும், விருதுநகர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தலா 11 பேருக்கும், நாகப்பட்டினத்தில் 12 பேருக்கும், திருப்பத்தூரில் 16 பேருக்கும், திருவண்ணாமலையில் 9 பேருக்கும், கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் 14 பேர், வேலூரில் 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் தலா 6 பேர் இந்த தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
நீலகிரி மாவட்டத்தில் 4 பேருக்கும், தென்காசி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேருக்கும், ராமநாதபுரத்தில் இருவருக்கும், அரியலூர் மற்றும் பெரம்பலூரில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கோவிட்- 19 தொற்று: அண்ணா பல்கலைக்கழகம் செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைப்பு
சென்னை நிலவரம்
Here's the zone wise breakup of Covid-19 positive cases in #Chennai.#Covid19Chennai#GCC#ChennaiCorporationpic.twitter.com/y7Fde5WglX
— Greater Chennai Corporation (@chennaicorp) April 9, 2020
சென்னையில் 163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 45 பேரும், திருவிக நகரில் 24 பேரும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இதற்கு அடுத்தபடியாக கோடம்பாக்கத்தில் 19 பேருக்கும், அண்ணாநகரில் 17 பேருக்கும், தண்டையார்பேட்டையில் 14 பேருக்கும், தேனாம்பேட்டையில் 12 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பெருங்குடியில் 6 பேருக்கும், அடையாறு, வளசரவாக்கம் மற்றும் திருவொற்றியூரில் தலா 4 பேருக்கும், மாதவரத்தில் மூன்று பேருக்கும், ஆலந்தூர் மற்றும் சோழிங்கநல்லூரில் தலா இருவருக்கும் இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.