தமிழகத்தில் நான்கு இடங்களில் கொரோனா சோதனை தளங்கள் – முழு விவரம் இங்கே

COVID 19 : ஆந்திரா, அசாம், கேரளா ஆகிய மாநிலங்களில் நான்கு இடங்களிலும், கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் ஐந்து இடங்களிலும் சோதனை தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

COVID 19 testing sites in chennai and india full list
COVID 19 testing sites in chennai and india full list

COVID-19 Testing Sites: சீனாவின் வுஹான் நகரில் தோன்றி உலகம் முழுவதும் 155 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 107 ஆக அதிகரித்து இருந்தது. 2 பேர் பலியாகி உள்ளனர். 13 பேர் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளனர். இன்று வரை 114 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் அனைத்து மாநிலங்களையும் சேர்த்து மொத்தம் 62 கோவிட் 19 சோதனை தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

”சிகிச்சை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்” – கொரோனாவில் இருந்து மீண்ட நோயாளி

அதாவது, 62 இடங்களில் வைரஸ் ஆராய்ச்சி மற்றும் நோய் கண்டறிதல் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.

அதுகுறித்த முழு விவரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, தமிழகத்தில் நான்கு இடங்களில் கோவிட் 19 சோதனை தளங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

King’s Institute of Preventive Medicine & Research, Chennai

Government Medical College, Theni

Tirunelveli Medical College, Tirunelveli

Govt. Medical College, Thiruvarur

ஆகிய நான்கு இடங்களில் சோதனை தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆந்திரா, அசாம், கேரளா ஆகிய மாநிலங்களில் நான்கு இடங்களிலும், கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் ஐந்து இடங்களிலும் சோதனை தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி, சென்னையில் உள்ள மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் ஆய்வகங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Covid 19 testing sites in chennai and india full list

Next Story
மியூசியம், தியேட்டர், டாஸ்மாக் பார்கள் மே 31 வரை மூடப்படுகின்றன: தமிழக அரசு அறிவிப்புEntertainment, tamil cinema theatre, coronavirus, covid 19
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express