”சிகிச்சை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்” – கொரோனாவில் இருந்து மீண்ட நோயாளி

ஏற்றுமதியாளரான அவர் இத்தாலியில் நடைபெற்ற வர்த்தக கண்காட்சிக்கு சென்றுள்ளார். மிலன், புதாபெஸ்ட், வியென்னா ஆகிய இடங்களுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

By: Updated: March 16, 2020, 04:21:42 PM

Astha Saxena

Delhi’s first Covid-19 patient after recovery says he will spread awareness  : சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சரியாக மாலை 03:30 மணிக்கு, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் முற்றிலும் குணம் அடைந்துவிட்டார் என்று மருத்துவர்கள் கூறினர். இதனை அறிந்த அந்த நோயாளி மிகவும் மகிழ்ச்சியுடன் தன்னுடைய உடைமைகளை எடுத்துக் கொண்டு மாலை 06:30 மணி அளவில் வீடு திரும்பினார். கிழக்கு டெல்லியை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க அவர் தன்னுடைய இரண்டு மைத்துனர்களுடன் இத்தாலியில் நடைபெற்ற வர்த்தக கண்காட்சிக்கு சென்றுள்ளார். ஏற்றுமதியாளரான அவர் மிலன், புதாபெஸ்ட், வியென்னா ஆகிய இடங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

To read this article in English

14 நாட்களுக்குப் பிறகு சனிக்கிழமையன்று (14/03/2020) தன்னுடைய தாயை சந்தித்துள்ளார் அவர். 65 வயதுமிக்க அந்த தாய் தன்னுடைய மகனை பார்க்கவும் அழவே துவங்கிவிட்டார். எங்கள் அனைவருக்கும் மிகவும் உணர்ச்சிப்பூர்வமான தருணம் அது. 14 நாட்களுக்கு பிறகு நான் அவர்களை சந்திக்கின்றேன். நான் முழுவதும் குணமடைந்து பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்று அவர்கள் காத்துக் கொண்டிருந்தனர் என்று இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார். இவர் டிஸ்சார்ஜ் ஆனதில் இருந்து இவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்த வண்ணமே உள்ளது.

மேலும் படிக்க : இந்தியாவில் ஒரே நாளில் அதிகரித்த கொரோனா நோய் தொற்று… 26 புதிய கேஸ்கள் பதிவு

என்னுடைய நண்பர்களில் ஒருவர் எனக்கு போன் செய்த போது கொரோனா வைரஸ் தொற்றினை பரிசோதிக்க எடுக்கப்படும் சிகிச்சைகள் மிகவும் வலியுடன் இருந்ததா என்று கேட்டார். நான் அவருக்கு ”எடுக்கப்பட்ட பரிசோதனைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்” குறித்து அவரிடம் விளக்கினேன். மருத்துவமனையிலிருந்து வெளியேறி வந்த பின்பு இந்த நோய் குறித்தும், இந்த நோய்க்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும், பலதரப்பட்ட மக்களுக்கு நான் விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்று  வருகிறேன். இந்தியாவில் மிகச் சிறந்த மருத்துவ வசதிகள் உள்ளது என்றும் அவர் மேற்கோள் காட்டினார்.

அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்த பின்பு அவருடைய உறவினர்கள் மருத்துவ கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின் படி அடுத்த பதினான்கு நாட்களும் அவர் அவருடைய வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார். சீரான இடைவெளியில்  அவருடைய  உடல்நிலை ஆரோக்கியம் குறித்து மருத்துவர்கள்  பரிசோதனை செய்வார்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த நபர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சேர்க்கப்பட்டார் மனிதர்கள் தனிமை என்ற வார்த்தையை கேட்ட உடனே பயம் கொள்கிறார்கள். ஒரு படுக்கை வசதியுடன் கூடிய அறையைத்தான் அவர்கள் ஐசோலேட்டட் வார்ட் என்று அழைக்கின்றார்கள். முறையான சுகாதார வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகின்றன. மருத்துவ உதவியுடன் மட்டுமே இந்த நோயை குணப்படுத்த முடியும். ஹோலியை மருத்துவமனையில் இருந்தது குறித்து அவர் கூறியபோது “ஹோலி என்று தனக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அழைப்பு விடுத்தார். வீடியோகாலில் என்னை அழைத்து என்னுடைய உடல்நலம் குறித்து அமைச்சர் விசாரித்தர். இது எனக்கு மிகவும் பெருமை மிக்க தருணம். அவரை ஒரு மருத்துவர் என்று தெரியும். இந்த சூழ்நிலையில் அவர் மிகவும் பரபரப்புடன் இயங்கி வருகிறார் என்றும் தெரியும். ஆனால் அவர் எனக்கு அழைப்பு விடுத்து பேசுவார் என்று நான் நினைக்கவும் இல்லை. நீங்கள் இப்போது பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று அவர் கூறியதையும் நினைவு கூர்ந்தார்.

மேலும் படிக்க : “சென்னைக்காரங்களுக்கு கொஞ்சம் கூட” – அஸ்வின் ட்வீட்!

இந்தியாவில் போலியோ இப்போது இல்லை அதே போன்று இந்த கொரோனா வைரஸும் ஒருநாள் இல்லாமல் போகும் என்று அந்த நோயாளி அறிவித்தார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Delhis first covid 19 patient after recovery says he will spread awareness

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X