Advertisment

கொரோனாவுக்கு அதிக கட்டணம் வசூலிப்பு: சென்னை மருத்துவமனைக்கு அனுமதி ரத்து

A1 மற்றும் A2 தர மருத்துவமனைகளுக்கு வென்டிலேட்டர் இல்லாமல் ஐ.சி.யுவில் ஒரு நாளைக்கு ரூ .10,000 ஆகவும், A3-A6 தர மருத்துவமனைகளுக்கு ரூ .9,000 ஆகவும் மாநில அரசு நிர்ணயித்திருந்தது.

author-image
WebDesk
New Update
Chennai Hospital's approval suspended for overcharging, covid 19 treatment

கொரோனா தொற்றுக்கு அதிக கட்டணம் வசூலித்ததாக புகார்

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்ததாக புகார் எழுந்ததால், அரும்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின், கோவிட் -19 சிகிச்சையளிப்பதற்கான ஒப்புதலை தற்காலிகமாக சுகாதாரத் துறை நிறுத்தியது. அந்த மருத்துவமனை 18 நாள் சிகிச்சைக்காக ரூ .12.5 லட்சம் வசூலித்துள்ளதாகவும், செலுத்தியது போக மீதமுள்ள தொகையை செலுத்த நோயாளியின் குடும்பத்திடம் மருத்துவமனை வலியுறுத்தியதும் உறுதி செய்யப்பட்ட பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

Advertisment

பாக்க இது சிம்பிள்… ஆனா ஊட்டச்சத்தான பிரேக்பாஸ்ட்!

அந்த மருத்துவமனைக்கு முன் கூட்டியே ரூ 2.5 லட்சம் செலுத்தப்பட்டது. கோவிட் -19 சிகிச்சைக்கு நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது, சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. மருத்துவமனைகளுக்கு அரசு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

”அவர்கள் அரசாங்க கட்டண விளக்கப்படத்தை நோயாளிகளிடம் முக்கியமாகக் காட்ட வேண்டும் என்ற டி.எம்.எஸ்-ன் அதிகாரி ஒருவர், நோயாளியின் உறவினர் புகார் அளித்த பின்னர், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார். அந்த நோயாளி செவ்வாய்க்கிழமை இறந்தார்.

வங்கக் கடலில் புயல்: தமிழகத்திற்கு மழை வாய்ப்பு?

A1 மற்றும் A2 தர மருத்துவமனைகளுக்கு வென்டிலேட்டர் இல்லாமல் ஐ.சி.யுவில் ஒரு நாளைக்கு ரூ .10,000 ஆகவும், A3-A6 தர மருத்துவமனைகளுக்கு ரூ .9,000 ஆகவும் மாநில அரசு நிர்ணயித்திருந்தது. AI மற்றும் A2 தர மருத்துவமனைகளில் வென்டிலேட்டருடன் கூடிய ஐ.சி.யுவில் ஒரு நாளைக்கு சிகிச்சை செலவு ரூ .14,000 மற்றும் A3-A6 மருத்துவமனைகளுக்கு ரூ .12,600 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment