Easy Breakfast Recipe In Tamil, Oats Breakfast: ஒருநாளை ஆரோக்கியமாக தொடங்க, காலை உணவு ரொம்பவும் முக்கியம். அதனால் தினமும் ஒரே உணவை சாப்பிட்டால், அது நமக்கு ஒருவித சலிப்பை ஏற்படுத்தும்.
டாக்டர் டூ நடிகை: கனவை நனவாக்கிய ஜீ தமிழ் தர்ஷனா!
எனவே ஒரு சுவாரஸ்யமான காலை உணவை எப்படி தயாரிப்பது என உங்களுக்குத் தெரியாவிட்டால், இதோ உங்களுக்கு ஓர் டக்கரான ஐடியா. உங்களுக்கு ஒரு சுவையான ரெசிப்பியை எங்களிடம் வைத்திருக்கிறோம். இதை இரவில் பாலில் ஊறவைத்த ஓட்ஸுடன் தயாரிக்கலாம்.
ஊட்டச்சத்து நிபுணர் ஷிவிகா காந்தியிடமிருந்து இந்த எளிதான ரெசிப்பீ. “சுவையான மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒன்றை நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தால், இந்த காலை உணவு மிகவும் சிறந்தது” என்கிறார் அவர்.
தேவையானப் பொருட்கள்
25 கிராம் - ஓட்ஸ்
1 கப் - டோன்டு பால்
½ டீஸ்பூன் - வால்நட் வெண்ணெய்
1 - ஆப்பிள்
ஒரு சிட்டிகை - இலவங்கப்பட்டை தூள்
1 தேக்கரண்டி - ஆளி விதைகள்
தேன்மொழி பி.ஏ: மருமகளுக்கு செஞ்ச கொடுமை – மகளிடம் மாட்டிக்கிட்ட வேதனை
செய்முறை
* சுமார் 25 கிராம் ஓட்ஸை எடுத்து அதில் ஒரு கப் டோன் பால் சேர்க்கவும்.
* இந்த கலவையில் வால்நட் வெண்ணெய் சேர்க்கவும்.
* இதை இரவு முழுவதும் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
* அடுத்த நாள் காலை, ஒரு ஆப்பிளை துண்டாக்கி, இந்த கலவையில் சேர்க்கவும். இதனுடன் ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி ஆளி விதைகளை சேர்த்து அலங்கரிக்கவும்.
* உங்கள் ஆரோக்கியமான காலை உணவு நிறைய நியூட்ரியண்டுகளுடன் தயார்!
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”