Covid cases in Chennai : வரும் ஜூலை 15 ஆம் தேதிக்குள் சென்னையில் 1.5 லட்சம் பேர் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அக்டோபர் மாதம் கொரோனா வேகமெடுக்கும் என்றும் ஜூலை 15-க்குள் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 1.5 லட்சமாக உயரும் எனவும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த நேரத்தில் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் இந்த ஆய்வறிக்கை செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் இறுதியில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை தமிழகத்தில் 1.32 லட்சமாகும் என்றும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில் பாதிப்பின் வேகம் தொடர்ந்து ஜூன் இறுதியில் மேலும் அதிகரிக்கும்.
ஜூலை 15 ஆம் தேதிக்குள் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு 1.5 லட்சமாகிவிடும்” என கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுக் குறித்து எம்.ஜி.ஆர் பல்கலைக்கழத்தின் பேராசிரியரும்,தொற்றுநோயியல் துறையின் மூத்த பேராசிரியர் டாக்டர் ஜி. சீனிவாஸ், ”கொரோனா பாதிப்பு ஜூலை 15 ஆம் தேதிக்குள் சென்னையில் 1.5 லட்சத்தை எட்டும் என்றும் அக்டோபர் மாதம் நடுவில் உச்சம் பெறும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார். இந்த முதல்நிலை ஆய்வறிக்கையை பல்கலைகழகம் ஏப்ரல் தொடங்கி மே முதல் வாரத்தில் அரசாங்கத்திடம் சமர்பித்ததாக அவர் கூறியுள்ளார். இருந்த போது தொற்றை விரட்ட அரசாங்கத்திடம் போதுமான அளவு படுக்கைகள், தனிமைப்படுத்தும் வசதிகள், ஐ.சி.யுக்கள் போன்ற தேவையான அனைத்து வசதிகளும் தயாராக இருப்பதாக சீனிவாஸ் தெரிவித்துள்ளார்.
19 நாட்களில், தமிழகத்தில் நோய் தொற்று வியாழக்கிழமை 10,000 முதல் 27,256 ஆக உயர்ந்தன. நகரங்களில் 9,066 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளன. வியாழக்கிழமை மட்டும் 1,072பேர் நோய்தொற்றால் பாதிக்கப்படுள்ளனர். மார்ச் 7 முதல் தமிழகத்தில் பதிவான மொத்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிகை 18,693. இவர்கள் அனைவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள்.
தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு 220 பேர் பலி
இதுக் குறித்து மூத்த விஞ்ஞானியும், தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநருமான டாக்டர் ஆர்.ராமகிருஷ்ணன் கூறுகையில் “ ஆராய்ச்சியாளர்கள் தெய்வங்களும் இல்லை, இது அவர்களின் யூக முடிவுகளும் இல்லை. கடந்த இரண்டு மாதங்களாக அவர்களின் கணிப்புகள் உண்மையாக இருந்ததால், பல சமூக காரணிகள் இருப்பதால் வரும் மாதங்களில் அது இன்னும் தவறாக போகலாம் என்று நாம் கூற முடியாது. ஆனால் இவை தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய அறிகுறிகள் இப்போது உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் அளித்திருக்கும் பேட்டியில், “நகரங்களில் இதுவரை 9,034 பேர் நோய் தொற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். கடந்த 14 நாட்களில் சுமார் 1,000 கட்டுப்பாட்டு மண்டலங்கள் (அல்லது தெருக்களில்) ஒரு வழக்கு கூட பதிவாகவில்லை. அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் சென்னையில் உள்ளன, ஆனால் முழு நகரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக அர்த்தமல்ல. ராயபுரம், அண்ணா நகர், தேனம்பேட்டை மற்றும் கோடம்பாக்கத்தில் அதிக நெரிசலான குடியிருப்பு பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச நோய்தொற்று ஏற்பட்டுள்ளது. ” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil