COVID19 outbreak Ariyalur village president Chandra Ramamurthy lauds scavengers : அரியலூர் மாவட்டம் கண்டராதித்தம் பகுதியில் 1250 குடும்பங்கள் வசித்து வருகின்றது. கொரோனா நோய் தொற்றினை தொடர்ந்து ஊர் மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து வகையான உதவிகளையும் அவர் செய்து வருகிறார். ரூ. 300 மதிப்பிலான தொகுப்பில் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றார்.
Advertisment
அந்த பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்களுக்கு தேவையான பொருட்களையும் அவர் வழங்கி வருகிறார். நேற்று தூய்மை பணியாளர்களின் கால்களை கழுவி பூஜை செய்துள்ளார் ஊராட்சி மன்றத் தலைவர் சந்திரா. இவரின் இந்த செயல் ஊர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது.
இது குறித்து அவர் கூறிய போது, எங்களின் கிராமம் மிகவும் பின் தங்கியுள்ள கிராமம். இங்கு மக்களுக்கு போதுமான விழிப்புணர்வு தருவதில் சிக்கல் நிலவுகிறது. ஆனாலும், கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு தங்களின் உயிர் பற்றி துளியும் வருந்தாமல் தொடர்ந்து இவர்கள் மக்களுக்கு சமூக பணி செய்து வருகின்றனர் என்று தூய்மை பணியாளர்கள் குறித்து அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”