Tamil Nadu Weather Report Today In Tamil: தமிழகத்தை நோக்கி வந்த ஃபனி புயல் மே 1-ம் தேதிக்கு பிறகு வட கிழக்காக திரும்பிச் செல்லும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. இதனால் தமிழகத்திற்கு மழை கிடைக்குமா? அனல்தான் வீசுமா? என விவாதம் எழுந்திருக்கிறது. வானிலை நிலவரம் தொடர்பாக இன்றைய தகவல்களின் தொகுப்பு இங்கே.
கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் ஹாட் டாபிக் இந்த ஃபனி புயல். சித்திரை மாதம் உருவாகும் இந்த புயலால் என்னென்ன இழப்புகளை தமிழகம் சந்திக்கப் போகின்றதோ என்ற பயம் ஒரு பக்கமும், புயல் இங்கு கரையைக் கடக்காமல், ஆந்திரா அல்லது வங்கதேசத்திற்கு பயணித்துவிட்டால், ஆகஸ்ட் மாதம் வரை தண்ணீருக்கு தட்டுப்பாடு என்று பல்வேறு பிரச்சனைகள் மறுபக்கம் என்ற நிலையை உருவாக்கிவிட்டது ஃபனி புயலின் உருவாக்கம்.
இன்று மற்றும் நாளை நல்ல மழை தமிழகம் எங்கும் இருக்கும் என்று பல்வேறு வானிலை ஆராய்ச்சி அறிக்கைகள் நமக்கு உறுதி செய்தாலும், சென்னை மற்றும் வடக்கு கடலோரப் பகுதிகளில் மழைக்கான அறிகுறி இதுவரை தோன்றவில்லை. நாளை மற்றும் நாளை மறுநாள் புயல் கரையைக் கடக்கும் என்பதால் பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.
Cyclone Fani Chennai Weather Forecast: சென்னை வானிலை ஆய்வு மையம்
நேற்று நள்ளிரவு 11:30 மணி அளவில் இந்திய வானிலை மையம் அளித்த அறிக்கையின் படி, ஃபனி புயலானது, சென்னைக்கு தென்கிழக்கே 1110 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது என்றும் அடுத்த 12 மணி நேரத்தில் அது அதி தீவிரபுயலாக உருமாறும் என்றும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து வடமேற்காக நகர்ந்து வருகிறது ஃபனி புயல்.
CS ‘FANI’ over SE BoB lay centred at 2330 hrs IST of 27th April, 2019 about 1110 km SE of Chennai . It is very likely to intensify into a Severe Cyclonic Storm during next 12 hours. It is very likely to move northwestwards till 30th & thereafter recurve northeastwards gradually. pic.twitter.com/QUxZDdiUip
— India Met. Dept. (@Indiametdept) 27 April 2019
Live Blog
Chennai Weather Forecast Live Updates : இந்த ஃபனி புயல் அடுத்த 12 மணி நேரத்திற்குள் வலுப்பெற்ற புயலாக உருமாறும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
மே 1-ம் தேதி வரை வட மேற்கு திசையில் நகரும் ஃபனி புயல், பின்னர் வட கிழக்காக நகரும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் தமிழகத்திற்கு புயல் அபாயம் நீங்கியதாக தெரிகிறது. எனினும் இந்தக் கோடையின் குடிநீர் பஞ்சத்தை தணிக்க கிடைக்கவிருந்த தண்ணீரை பல மாவட்டங்கள் தவற விடக்கூடிய சூழல் உருவாகியிருக்கிறது. அதைவிட, புயல் திசைமாறிச் செல்வதால், தமிழகப் பகுதியில் வளி மண்டலத்தில் உள்ள மொத்த ஈரப் பதத்தையும் உறிஞ்சும் அபாயம் இருப்பதாகவும், அதனால் இங்கு வெப்பநிலை எகிறும் வாய்ப்பு இருப்பதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறும் தகவல்கள் மக்களை கவலைக்குள்ளாக்குகிறது. அரசு வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் இது குறித்து தெளிவாக இன்னும் அறிவிக்கவில்லை.
புயல் நெருங்கி வந்து விலகிச் செல்வதால் வெப்பத்தின் தாக்கம் கோடை முழுவதும் மிக அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், மக்கள் தங்களின் பயண நேரம், அலுவல் நேரம், ஆகியவற்றை திட்டமிட்டு வெளியில் செல்லுங்கள். கூடுமான வரையில் குழந்தைகளை வெளியில் அலைக்கழிக்க வேண்டாம்.
கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் இந்த ஃபனி புயலால் பாதிப்புக்கு உள்ளாகும் எனவும், இதனால் பல இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை வல்லுநர்கள் தெரிவித்தார்கள்.
மீனவர்கள் இன்று தென்கிழக்கு வங்கக் கடலுக்கு செல்லவேண்டாம் என்றும், அடுத்த மூன்று நாட்களுக்கு தென்மேற்கு வங்க கடலுக்கும் மத்திய மேற்கு வங்கக் கடலுக்கும் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.
சென்னைக்கு தென் கிழக்கே 1050 கி.மீ தொலைவில் இருக்கிறது ஃபனி புயல். இன்று இரவு தீவிரப் புயலாகவும், நாளை அதிதீவிரப்புயலாகவும் மாறும் என்றும், 300 கி.மீ வரை பயணித்து வடகிழக்கு திசையில் திசை மாறும் என்றும் கூறினார். இதனால் இந்த புயல் தமிழக கடற்கரையை கடக்க வாய்ப்பில்லை என்பதை உறுதி செய்தார் அவர். நேரடியான பாதிப்புகள் ஏதும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். புயல் நெருங்கி வரும் வேலையில், லேசானது முதல் மிதமான மழை மட்டுமே பெய்யக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஃபனி புயல் இன்று மதியம் தீவிரப்புயலாக உருமாறுகிறது. சென்னை நோக்கி நகரும் அந்த புயல் 300 கி.மீ தொலைவில் இருக்கும் போது, வங்கம் நோக்கி திசை மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏப்ரல் 30 மற்றும் மே 1ம் தேதி தமிழகத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை இருக்கலாம் என்று வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது.
புயல் அபாயத்தில் இருந்து மக்களை பாதுகாக்க 9 பேரிடம் மையங்களும், 22 புயல் பாதுகாப்பு மையங்களும் தயார் நிலையில் இருப்பதாக நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் அறிவித்துள்ளார். கல்லூரிகள், பள்ளிகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட 627 பொதுக்கட்டிடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்றும், 14 மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
வங்கக்கடலின் தென்கிழக்குப் பகுதியில் 80 முதல் 90 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.
இன்று மாலைக்குள் அதன் வேகம் 115 கி.மீ என்று அதிகரிக்கலாம்.
சில இடங்களில் 30ம் தேதி காலையில் 155 முதல் 165 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
காலை 05:30 மணிக்கான வானிலை அறிக்கையின் படி, கடந்த 6 மணி நேரங்களாக 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது ஃபனி புயல். திரிகோணமலைக்கு தென்கிழக்காக 745 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்காக 1050 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது இந்த புயல். மச்சிலிப்பட்டினத்திற்கு தென்கிழக்காக 1230 கி.மீ-க்கு அப்பால் இருக்கும் இந்த புயல் அடுத்த 12 மணி நேஅத்தில் அதி தீவிர புயலாக இது உருமாறும்.
ஒரு வேலை தமிழகம் வரை நெருங்கி, புயல் கரையைக் கடக்காமல் திசை மாறினால், இந்த பகுதியில் இருக்கும் அனைத்து ஈரப்பதத்தையும் எடுத்துச் சென்றுவிடும் புயல். இதனால் கோடை காலத்தில் வெப்பநிலை மேலும் அதிகரித்து, இந்த வெப்பநிலைக்கு பலர் உயிரிழக்கும் அபாயமும் நிலவும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடலூர், புதுச்சேரி, பாம்பன் துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் கடற்கரையோரம் இருக்கும் படகுகளை பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்திச் செல்லும் பணியும் தீவிரம் அடைந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights