Cyclone Fani, Chennai Weather Today : கடந்த ஆண்டு சென்னைக்கு மழையைத் தரும் என்று நம்பிக் கொண்டிருந்த பெத்தாய் வடக்கு நோக்கி மேலே சென்று ஆந்திராவில் கரையைக் கடந்தது. கஜா புயலாவது மழையைத் தரும் என்றிருந்தால், அதுவும் கடலூர் மாவட்டத்தின் வேதாரண்யத்தில் கடலைக் கடந்தது.
சென்னையில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பாட்டுள்ள நிலையில் ஏப்ரலில் புயல் உருவாகி இருப்பது, சென்னையின் தண்ணீர் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
Cyclone Fani, Chennai Weather Today
இன்று காலை முதலே வானம் கொஞ்சம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று தமிழகத்திற்கு ஏப்ரல் 30 மற்றும் மே 1ம் தேதி ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கடலோரப்பகுதி மாவட்டங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க : நேற்று இந்திய வானிலை மையம் அளித்த முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள !
உங்கள் ஊரில் மழை பெய்யுமா, கோடை காலத்து வானிலையே நீடிக்குமா, அல்லது முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டுமா என்பது போன்ற உடனுக்குடன் அறிந்த கொள்ள வேண்டிய தகவல்களுக்காக இணைந்திருங்கள் தி தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்துடன் !
Live Blog
Cyclone Fani : கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 28/04/2019க்குள் கரை திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ஏப்ரல் 30-ம் தேதி வட தமிழகத்தில் கடலோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், இன்றும் நாளையும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி வட தமிழக கடற்கரையை நெருங்கி வருகிறது என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். கோடைகாலத்தைப் பொருத்தவரை 1966ம் ஆண்டு தான் ஒரு புயல் கடலூர் அருகே கரையை கடந்திருக்கிறது. 2010ம் ஆண்டு லைலா மற்றும் 2016ம் ஆண்டு ரோனோ போன்ற புயல்கள் கரைக்கு வந்தன. ஆனால் கரையை கடக்கவில்லை. இந்த புயலின் மூலம் நமக்கு காற்றும் மழையும் கிடைக்கும். ஒவ்வொரு புயலும் ஒவ்வொரு விதம் என்று அவர் கூறியுள்ளார்.
வடமேற்காக நகர்ந்து வரும் ஃபனி புயல் தற்போது திரிகோணமலைக்கு தென்கிழக்கே 1090 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 1440 கி.மீ தொலைவிலும், மச்சிலிப்பட்டினத்திற்கு 1720 கி.மீ தென்கிழக்கே இந்த புயல் மையம் கொண்டிருக்கிறது.
Bulletin 02 - The depression over east equatorial IO & adjoining SE BOB moved NW with a speed of about 16 kmph about 1090km SE of #Trincomalee, 1440km SE of #Chennai and 1720 SE of #Machilipatnam. It is likely to move NW of Srilanka coast during the next 96 hours. pic.twitter.com/ux4WjnNHxs
— TN SDMA (@tnsdma) 26 April 2019
வானிலை ஆய்வு மையம் ஃபனி தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து, பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கைப் பணிகள் தமிழகம் மற்றும் புதுவையில் துரித நிலையில் நடைபெற்று வருகிறது. காரைக்கால் ஆட்சியர் விக்ராந்த ராஜா தலைமையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பொதுப்பணித்துறை, மின்துறை, காவல்துறை, மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தேர்தல் நடத்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால் தலைமைச் செயலாளர் மற்றும் அதிகாரிகள் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தலாமா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறுகையில் தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகள் புயல் ஆய்வு கூட்டம் நடத்த தடையில்லை என்று அறிவித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் மதியம் 12 மணி முதல் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
புதுவை மற்றும் தமிழக கடலோர பகுதிகளுக்கு 30 மற்றும் மே 1ம் தேதி ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், விடுப்பில் இருக்கும் அனைத்து அதிகாரிகளும் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார் புதுவை முதல்வர் நாராயணசாமி. மேலும் அனைத்து துறை அதிகாரிகளும், பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுடன் உதவி புரியும் வகையில் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாளை காலை முதலே பலத்த காற்று வீசும் என்று கூறியுள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். அதன்படி, வடமேற்கு வங்கக்கடலிலும், இந்தியப் பெருங்கடல் பகுதியிலும், இலங்கையின் கடற்கரைப் பகுதியிலும் மணிக்கு 80 முதல் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழக கடற்கரையோரம், மன்னார் வளைகுடா பகுதி மற்றும் குமரிப் பகுதியில் 40 முதல் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும், கேரளா பகுதியில் 30 முதல் 50 கி.மீ வரை காற்று வீசும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் பலத்த காற்று வீசத் துவங்கும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் சுமார் 55 கிமீ வேகத்தில் காற்று வீசத்துவங்கும் என்றும், 28ம் தேதி இலங்கை கடலோரப் பகுதியில் 100 கி.மீ வேகத்திலும், 29ம் தேதி தமிழகம் மற்றும் கடலோரப் பகுதியில் 115 கி.மீ வேகத்தில் காற்று வீசக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் பெரும்பாலும் புயல்கள் உருவாவதில்லை. அப்படியே வங்கக்கடலில் புயல்கள் உருவானாலும், அது பர்மாவையே தாக்கும். கிட்டத்தட்ட 50 வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தை நோக்கி வருகிறது ஏப்ரல் மாதத்தில் உருவான இந்த ஃபனி புயல்.
கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்ற நிலையில், இந்த புயல் கொஞ்சம் மன நிம்மதி அளிப்பதாக இருந்தாலும் அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்ப நிலையில் மாற்றம் ஏதும் இருக்காது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கடல் சீற்றம் அதிகரிக்க அதிகரிக்க புயல் எச்சரிக்கை கூண்டுகளில் எண்கள் அறிவிக்கப்படும். 1 முதல் 11 வரை எச்சரிக்கை எண்கள் அறிவிக்கப்படும். கஜ புயலின் போது 40 வருடங்கள் கழித்து 10ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. நாளை மற்றும் பின் வரும் நாட்களின் புயல் எச்சரிக்கை கூண்டுகளின் எண்கள் மாற்றம் செய்யப்பட்டுக் கொண்டே இருக்கும். அதை பற்றிய செய்திகளையும், அபாயங்களையும் எண்களை வைத்து எப்படி அறிவது என்பதை கீழே இருக்கும் லிங்கில் க்ளிக் செய்து படியுங்கள்...
புயல் எச்சரிக்கை கூண்டுகள் அறிவிக்கும் அபாய செய்திகளை அறிவது எப்படி ?
தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கடலுக்குள் சென்றவர்கள் விரைவில் கரை திரும்பவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Sea condition and warning for fishermen:
Source:IMD pic.twitter.com/uTaOr5DJmw
— NDMA India (@ndmaindia) 25 April 2019
வருகின்ற 30 மற்றும் 1ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப்பகுதி மாவட்டங்களுக்க்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
It is very likely to intensify into a depression during next 24 hours over East Equatorial Indian Ocean & adjoining central parts of south Bay of Bengal and into a Cyclonic Storm during subsequent 24 hours over southwest Bay of Bengal & adjoining Equatorial Indian Ocean.
IMD pic.twitter.com/63iWVro7u2
— NDMA India (@ndmaindia) 25 April 2019
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 76 தாழ்வான பகுதிகளை கண்காணிக்க 9 மண்டல அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியல் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. உதவி மற்றும் தகவல்களை அறிந்திட மக்கள் 1077 என்ற எண்ணை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் 04652-231077 மற்றும் 04652-227460 எண்ணிலும் உதவிக்கு அழைக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights