Advertisment

chennai weather: தமிழகத்தில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு! - இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

chennai weather: நெல்லை, கன்னியாகுமரி, போன்ற இடங்களில் மழை அதிகமாக பெய்ததாக தகவல்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rain in Tamilnadu

Rain in Tamilnadu

chennai weather: கோடை வெயில் கொளுத்தி வெக்கையை உண்டு பண்ணும் நேரத்தில் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இருந்த போதும் சென்னையில் மழையை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிச்சம்.

Advertisment

ஆனால் இப்போது மீண்டும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் சென்னை வானிலை மையம் ஒரு மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகவுள்ளது.

இது வரும் 26ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புண்டு. இதன் காரணமாக வரும் 27, 28 ஆகிய தேதிகளில் புயலாக வலுப்பெற்று, தமிழகக் கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

மேலும் படிக்க : இன்று முதல் தமிழகத்தில் 115 கி.மீ. வேகத்தில் மழை பெய்யக் கூடும்

Live Blog

chennai weather: இந்திய வங்கக்கடலோரத்தில் புயல் போவதாக சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு விடுத்துள்ளது. பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் என்று அறிவித்துள்ளது.



























Highlights

    21:05 (IST)25 Apr 2019

    ரெட் அலர்ட் இருக்கா?

    தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்படவில்லை என்று தமிழக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இருப்பினும், மிகத் தீவிரமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

    17:55 (IST)25 Apr 2019

    tamilnadu rain report : மிக மிக கனமழை!

    தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மிக மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. 

    17:22 (IST)25 Apr 2019

    Cyclone Fani impact : நெருங்கும் ஃபனி புயல்!

    சென்னை கடலில் பலத்த காற்றுடன் லேசான கடல் சீற்றம் காணப்படுவதாக மீன்வர்கள் தெரிவித்துள்ளனர். 

    16:57 (IST)25 Apr 2019

    Cyclone Fani : ஃபனி புயலின் வேகம்!

    1500 கி.மீ தொலைவில் ஃபனி புயல் தற்போது உள்ளது. கிழக்கில் கிட்டத்தட்ட 85 டிகிரி  நோக்கில். அது நகர்வது மற்றும் வலுப்பெறுவதைத் தொடர்ந்தே அடுத்தக்கட்ட நடவடிக்கை என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

    16:42 (IST)25 Apr 2019

    Fani Cyclone alert : மீனவர்களுக்கு தடை!

    இன்று (25. 4. 19) மற்றும் நாளை  மீனவர்கள் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

    16:28 (IST)25 Apr 2019

    red alert : சென்னை வானிலை மைய இயக்குனர் பேட்டி!

    சென்னைக்கு 1500 கி.மீ. தூரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளது. இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏப்ரல் 27, 28-ஆம் தேதி புயலாக மாறும்.அவ்வாறு உருவானால் வடதமிழகம் நோக்கி வர வாய்ப்புள்ளது. எனவே ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் புயலாக மாறும். இந்த தேதிகளில் கனமழை பெய்யும்.

    ஏப்ரல் 30 மற்றும் மே 1-ஆம் தேதி கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதால் அந்த இரு தினங்களுக்கு தமிழகத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை” விடுக்கப்பட்டுள்ளது என்றார். 

    16:25 (IST)25 Apr 2019

    red alert in tamilnadu : தமிழகத்திற்கு ரெட் அலர்ட்!

    தமிழகம் மற்றும் புதுவைக்கு ஏப்ரல் 30, மே 1 ஆகிய இருநாட்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. கன மழை பெய்யும் என்பதால் முன் எச்சரிக்கைக்காக ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது. 

    14:52 (IST)25 Apr 2019

    Fani Cyclone symptoms : தென் தமிழகத்தில் சூறைக்காற்று!

    நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிதம்பரம் ஆகிய இடங்களில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. 

    14:34 (IST)25 Apr 2019

    NDMA : தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம்!

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு. வட மாநிலங்களான ஆசாம், மேகாலயா, அருணாச்சலபிரதேசம், மேற்கு வங்காளம், சிக்கீம் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    14:29 (IST)25 Apr 2019

    Fani Cyclone : புயல் எச்சரிக்கை முன் நடவடிக்கை!

    புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  தமிழக பேரிடர் மீட்புத்துறையினர் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. 

    14:10 (IST)25 Apr 2019

    Cyclone Fani : ஃபனி புயல்!

    ஃபனி என்பது உருது வார்த்தை. இதற்கு பல்வேறு அர்த்தங்கள் உள்ளன. பிரமாண்டமானது, ஆபத்தானது என்பது போன்ற பல்வேறு அர்த்தங்கள் ஃபனி புயலுக்கு கூறப்பட்டுள்ளன. 

    13:20 (IST)25 Apr 2019

    Weather TOLL FREE No : இலவச உதவி எண்!

    மழை மற்றும் புயல் குறித்த உடனடி தகவல்களுக்கு இலவச உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 1800 220 161 என்ற எண்ணிற்கு தொடர்ப்பு  கொண்டு உங்கள் பகுதியில் மழை நிலவரம் குறித்து தெரிந்துக் கொள்ளுங்கள். மற்றவர்களுக்கும் பகிருங்கள். 

    12:59 (IST)25 Apr 2019

    tamilnadu rain report : சென்னை வானிலை மைய இயக்குனர் !

    காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இது வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறும் என சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். 

    12:49 (IST)25 Apr 2019

    heavy rain in tamilnadu : கரையில் நிற்கும் படகுகள்!

    குளச்சல் சுற்றுவட்டார கடற் பகுதியில் கடல் சீற்றம்  காரனமாக  500க்கும் மேற்பட்ட கட்டுமர நாட்டு படகுகள் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

    12:44 (IST)25 Apr 2019

    rain in tamilnadu : கன்னியாகுமரியில் கடல் சீற்றம்!

    கன்னியாகுமரியில் இன்று காலை முதல் கடல் சீற்றம் காணப்பட்டு வருவதால் பொதுமக்கள் மற்றும் மீன்வர்கள் பீதி அடைந்துள்ளனர். 

    12:24 (IST)25 Apr 2019

    tamilnadu rain : கனமழைக்கு வாய்ப்பு!

    தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்  என்று இந்திய வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. 

    12:10 (IST)25 Apr 2019

    announcement for fisher mans : மீன்வர்களுக்கான அறிவிப்பு!

    நாளை முதல் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. 

    11:54 (IST)25 Apr 2019

    Cyclone Fani : புயலாக மாறினால் ஃபனி!

    இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: 

    ”புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். பின்னர் அது வலுப்பெற்று வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து, புயலாக மாற வாய்ப்பு உள்ளது. புயலாக மாறினால் அதற்கு ஃபனி (Cyclone Fani) என பெயரிடப்படும். இந்த புயல் 30-ம் தேதி தமிழக பகுதியில் கரை கடக்க வாய்ப்பு உள்ளது” 

    11:50 (IST)25 Apr 2019

    chennai weather man : சென்னை வெதர்மேன் அறிக்கை!

    தமிழகத்திற்கு   60 சதவீதம் மட்டுமே புயல் மற்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன்  ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

    11:28 (IST)25 Apr 2019

    tamilnadu weather report : மீனர்கள் அச்சம்

    கோடை காலத்தில் புயல் வருவதற்கான வாய்ப்பு குறைவுதான் என்று  தகவல் வெளியாகியிள்ள நிலையில்,   மீனவர்கள் , தங்களின் பாரம்பரிய கணிப்பு முறைகளின் படி சித்திரை புயல் ஆபத்தானது  என்று கூறி அச்சப்பட்டு வருகின்றனர். 

    11:14 (IST)25 Apr 2019

    IMD weather report : இந்திய வானிலை மையம் அறிக்கை

    11:11 (IST)25 Apr 2019

    chennai weather : புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

    இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் சந்திக்கும் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 

    chennai weather: இந்தக் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வுமண்டல்ம் அடுத்த 48 மணிநேரத்தில் புயலாக வலுப்பெறவும் வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டது.
    chennai weather

    chennai weather

    இந்நிலையில் ஏப்ரல் 27 ஆம் முதல் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.தமிழக கடற்கரையை நோக்கி இந்தப்புயலானது வரும் ஏப்ரல் 27, 28 ஆகிய தேதிகளில் நகரக்கூடும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

    புயலை விடுங்க! சென்னைக்கு மழை வருமா? வராதா?

    Tamilnadu Weather Rain In Tamilnadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment