Advertisment

Cyclone Fani: வங்கக் கடலில் சனிக்கிழமை மதியம் ஃபனி புயல்

Red Alert in Tamil Nadu : கடல் சீற்றம் காரணமாகவும், கனமழைக்கு வாய்ப்பிருப்பதன் காரணமாகவும், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை செய்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai weather today holiday announced

Chennai weather today holiday announced

Cyclone Fani, Chennai Weather Today : கடந்த ஆண்டு சென்னைக்கு மழையைத் தரும் என்று நம்பிக் கொண்டிருந்த பெத்தாய் வடக்கு நோக்கி மேலே சென்று ஆந்திராவில் கரையைக் கடந்தது. கஜா புயலாவது மழையைத் தரும் என்றிருந்தால், அதுவும் கடலூர் மாவட்டத்தின் வேதாரண்யத்தில் கடலைக் கடந்தது.

Advertisment

சென்னையில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பாட்டுள்ள நிலையில் ஏப்ரலில் புயல் உருவாகி இருப்பது, சென்னையின் தண்ணீர் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Cyclone Fani, Chennai Weather Today

இன்று காலை முதலே வானம் கொஞ்சம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது.  நேற்று தமிழகத்திற்கு ஏப்ரல் 30 மற்றும் மே 1ம் தேதி ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கடலோரப்பகுதி மாவட்டங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க : நேற்று இந்திய வானிலை மையம் அளித்த முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள !

உங்கள் ஊரில் மழை பெய்யுமா, கோடை காலத்து வானிலையே நீடிக்குமா, அல்லது முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டுமா என்பது போன்ற உடனுக்குடன் அறிந்த கொள்ள வேண்டிய தகவல்களுக்காக இணைந்திருங்கள் தி தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்துடன் !

Live Blog

Cyclone Fani : கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 28/04/2019க்குள் கரை திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.



























Highlights

    17:41 (IST)26 Apr 2019

    Fani Cyclone: வங்கக் கடலில் சனிக்கிழமை மதியம் ஃபனி புயல்

    வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ஏப்ரல் 30-ம் தேதி வட தமிழகத்தில் கடலோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், இன்றும் நாளையும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

    15:42 (IST)26 Apr 2019

    என்ன சொல்கிறார் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் ?

    காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி வட தமிழக கடற்கரையை நெருங்கி வருகிறது என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். கோடைகாலத்தைப் பொருத்தவரை 1966ம் ஆண்டு தான் ஒரு புயல் கடலூர் அருகே கரையை கடந்திருக்கிறது.  2010ம் ஆண்டு லைலா மற்றும் 2016ம் ஆண்டு ரோனோ போன்ற புயல்கள் கரைக்கு வந்தன. ஆனால் கரையை கடக்கவில்லை. இந்த புயலின் மூலம் நமக்கு காற்றும் மழையும் கிடைக்கும். ஒவ்வொரு புயலும் ஒவ்வொரு விதம் என்று அவர் கூறியுள்ளார்.

    15:26 (IST)26 Apr 2019

    பேரிடர் மீட்புக் குழுக்களை தயார் நிலையில் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

    மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுக்களை அனைத்துவிதமான உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க தமிழக டி.ஐ.பி. டி.கே.ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    15:21 (IST)26 Apr 2019

    1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

    நாகை, புதுச்சேரி, பாம்பன், மற்றும் காரைக்கால் பகுதியில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    15:18 (IST)26 Apr 2019

    16 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது ஃபனி புயல்

    வடமேற்காக நகர்ந்து வரும் ஃபனி புயல் தற்போது திரிகோணமலைக்கு தென்கிழக்கே 1090 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 1440 கி.மீ தொலைவிலும், மச்சிலிப்பட்டினத்திற்கு 1720 கி.மீ தென்கிழக்கே இந்த புயல் மையம் கொண்டிருக்கிறது. 

    13:14 (IST)26 Apr 2019

    முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனையில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர்

    வானிலை ஆய்வு மையம் ஃபனி தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து, பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கைப் பணிகள் தமிழகம் மற்றும் புதுவையில் துரித நிலையில் நடைபெற்று வருகிறது. காரைக்கால் ஆட்சியர் விக்ராந்த ராஜா தலைமையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பொதுப்பணித்துறை, மின்துறை, காவல்துறை, மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    12:53 (IST)26 Apr 2019

    புயல் தொடர்பாக முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்தலாமா ? தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் கேள்வி

    தேர்தல் நடத்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால் தலைமைச் செயலாளர் மற்றும் அதிகாரிகள் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தலாமா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறுகையில் தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகள் புயல் ஆய்வு கூட்டம் நடத்த தடையில்லை என்று அறிவித்துள்ளார்.

    12:30 (IST)26 Apr 2019

    புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை : கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் ஆலோசனை

    தலைமைச் செயலகத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் மதியம் 12 மணி முதல் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று  வருவது குறிப்பிடத்தக்கது. 

    12:22 (IST)26 Apr 2019

    அனைத்துத்துறை அதிகாரிகளும் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும் - புதுவை முதல்வர் நாராயணசாமி

    புதுவை மற்றும் தமிழக கடலோர பகுதிகளுக்கு 30 மற்றும் மே 1ம் தேதி ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், விடுப்பில் இருக்கும் அனைத்து அதிகாரிகளும் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார் புதுவை முதல்வர் நாராயணசாமி. மேலும் அனைத்து துறை அதிகாரிகளும், பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுடன் உதவி புரியும் வகையில் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். 

    11:54 (IST)26 Apr 2019

    28ம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு

    தமிழகம் மட்டுமல்லாமல் புதுச்சேரி, அசாம், மேகலாயா, அருணாச்சலப்பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் சிக்கிமில் சில பகுதிகளில் நாளை பலத்த கனமழை பெய்ய வாய்ப்புகள் உண்டு.

    11:43 (IST)26 Apr 2019

    இந்திய வானிலை ஆய்வு மையம் - இன்றைய அறிக்கை

    நாளை காலை முதலே பலத்த காற்று வீசும் என்று கூறியுள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். அதன்படி, வடமேற்கு வங்கக்கடலிலும், இந்தியப் பெருங்கடல் பகுதியிலும், இலங்கையின் கடற்கரைப் பகுதியிலும் மணிக்கு 80 முதல் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று கூறப்பட்டுள்ளது.  தமிழக கடற்கரையோரம், மன்னார் வளைகுடா பகுதி மற்றும் குமரிப் பகுதியில் 40 முதல் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும், கேரளா பகுதியில் 30 முதல் 50 கி.மீ வரை காற்று வீசும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    11:16 (IST)26 Apr 2019

    காற்றின் வேகம் எவ்வளவு இருக்கும் ?

    இந்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் பலத்த காற்று வீசத் துவங்கும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் சுமார் 55 கிமீ வேகத்தில் காற்று வீசத்துவங்கும் என்றும், 28ம் தேதி இலங்கை கடலோரப் பகுதியில் 100 கி.மீ வேகத்திலும், 29ம் தேதி தமிழகம் மற்றும் கடலோரப் பகுதியில் 115 கி.மீ வேகத்தில் காற்று வீசக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    09:51 (IST)26 Apr 2019

    50 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தை தாக்கும் ஏப்ரல் புயல் - Chennai Weatherman

    ஏப்ரல் மாதத்தில் பெரும்பாலும் புயல்கள் உருவாவதில்லை. அப்படியே வங்கக்கடலில் புயல்கள் உருவானாலும், அது பர்மாவையே தாக்கும். கிட்டத்தட்ட 50 வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தை நோக்கி வருகிறது ஏப்ரல் மாதத்தில் உருவான இந்த ஃபனி புயல்.

    இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க :

    09:45 (IST)26 Apr 2019

    TEMPERATURE WARNING : வெப்ப நிலையில் மாற்றம் இருக்குமா ?

    கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்ற நிலையில், இந்த புயல் கொஞ்சம் மன நிம்மதி அளிப்பதாக இருந்தாலும் அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்ப நிலையில் மாற்றம் ஏதும் இருக்காது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

    09:12 (IST)26 Apr 2019

    Cyclone Warning Symbols : புயல் எச்சரிக்கை கூண்டு எண்களை வைத்து அபாயத்தை எப்படி கண்டறிவது ?

    கடல் சீற்றம் அதிகரிக்க அதிகரிக்க புயல் எச்சரிக்கை கூண்டுகளில் எண்கள் அறிவிக்கப்படும். 1 முதல் 11 வரை எச்சரிக்கை எண்கள் அறிவிக்கப்படும். கஜ புயலின் போது 40 வருடங்கள் கழித்து 10ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. நாளை மற்றும் பின் வரும் நாட்களின் புயல் எச்சரிக்கை கூண்டுகளின் எண்கள் மாற்றம் செய்யப்பட்டுக் கொண்டே இருக்கும். அதை பற்றிய செய்திகளையும், அபாயங்களையும் எண்களை வைத்து எப்படி அறிவது என்பதை கீழே இருக்கும் லிங்கில் க்ளிக் செய்து படியுங்கள்... 

    புயல் எச்சரிக்கை கூண்டுகள் அறிவிக்கும் அபாய செய்திகளை அறிவது எப்படி ?

    08:57 (IST)26 Apr 2019

    Warning For Fishermen : விரைவில் கரை திரும்புங்கள் - மீனவர்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

    தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கடலுக்குள் சென்றவர்கள் விரைவில் கரை திரும்பவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

    Sea condition and warning for fishermen:

    08:53 (IST)26 Apr 2019

    Red Alert in Tamil Nadu : இந்திய வானிலை மையத்தின் எச்சரிக்கை

    வருகின்ற 30 மற்றும் 1ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப்பகுதி மாவட்டங்களுக்க்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

    08:47 (IST)26 Apr 2019

    Help Line Numbers for Cyclone Alert : கன்னியாகுமரி மாவட்டத்தில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 76 தாழ்வான பகுதிகளை கண்காணிக்க 9 மண்டல அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.  மாவட்ட ஆட்சியல் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.  உதவி மற்றும் தகவல்களை அறிந்திட மக்கள் 1077 என்ற எண்ணை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் 04652-231077 மற்றும் 04652-227460 எண்ணிலும் உதவிக்கு அழைக்கலாம்.

    Cyclone FANI formed in Bay of Bengal : 25/04/2019 இரவு 9:30 மணிக்கு இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்ட அறிகையின் படி, இந்திய பெருங்கடலின் கிழக்குப் பகுதியிலும், தெற்கு வங்கக்கடலின் மத்தியிலும் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்றும், அடுத்த 24 மணி நேரத்திற்குள் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும், 72 மணி நேரங்களில் அது புயலாக மாறி தமிழகத்தின் வடக்கு கடலோரப்பகுதியில் கரையைக் கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
    Tamilnadu Weather Rain In Tamilnadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment