cyclone fani: வட தமிழகம் மற்றும் தென் ஆந்திரப் பகுதிக்கு அருகே நகர்ந்து வரும் ஃபனி புயல், இன்று அதி தீவிர புயலாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இன்னும் 24 மணி நேரத்தில் ஃபனி புயல் அதிதீவிர புயலாக உருவெடுத்து, செவ்வாய் கிழமை வாக்கில் கரையை அடைய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது வானிலை மையம்.தற்போதைய நிலவரப்படி, ஃபனி புயல், சென்னையில் இருந்து 1,050 கிலோ மீட்டர் தொலைவிலும், மச்சிலிப்படிணத்தில் இருந்து 1,230 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
மேலும், வடமேற்கு திசை நோக்கி ஃபனி புயல் (Cyclone Fani) 16 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகும், ஏப்ரல் 30 முதல் அது வடகிழக்கு திசை நோக்கி நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வங்கக் கடலில் இருக்கும் மீனவர்கள், இன்று மாலைக்குள் கரைக்குத் திரும்பி விடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஃபனி புயல் (Cyclone Fani), சென்னையை கடக்க சிறிய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த புயல் காரணமாக வட தமிழக கடற்கரைப் பகுதியிலும் ஆந்திர கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
Live Blog
cyclone fani :
புயல் என்றாலே மக்கள் அஞ்சும் அளவுக்கு கடந்த காலங்களில் தமிழகம் பெரும் பாதிப்பை சந்தித்து இருந்தாலும், தற்போது வறட்சி நிலவுவதால் ஃபனி புயலால் போதிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதே செய்தியை ஆங்கிலத்தில் படிக்க..English

30-ந் தேதியும், 1-ந் தேதியும் மீனவர்கள் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் வடகிழக்கு திசையில் இந்த புயல் நகர்ந்து செல்லும்போது, 3-ந் தேதிக்கு பிறகு வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் இருந்து அதிகளவில் நிலக்காற்று வீசும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க.. புயல் பயணிக்கும் பாதையால் தமிழகத்திற்கு மழை கிடைக்குமா?
Highlights
நாளை ஃபனி புயலானது அதிதீவிர புயலாக உருவெடுக்க இருப்பதால் மணிக்கு 70. கிமீ வேகத்தில் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் கடலோர மாவட்டங்களில் இருக்கும் மக்கள் மாலை நேரத்தில் வீட்டை விட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடமேற்கு திசையை நோக்கி நகரும் அதிதீவிர பானி புயல், மே 1-ஆம் தேதிக்கு பின் தனது பாதையை மாற்றி வடகிழக்கு திசையை நோக்கி பயணிக்கும் என்றும் ஃபனி புயல் ஓடிசாவில் கரையை கடப்பதால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று (29.4.19) முதல் மே 4 ஆம் தேதி வரை மழை பெய்யும் நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை.
ஃபனி புயல் குறித்த நிலைமையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தேன். தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்கச் சொல்லியும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிடச் சொல்லியும் அறிவுறுத்தியுள்ளேன். பாதிக்கப்படும் என்ற எண்ணப்படும் மாநிலங்களுடன் இணைந்து பணி செய்யுமாறும் அவர்களிடம் கூறியுள்ளேன். அனைவரின் பாதுகாப்பு மற்றும் நலத்துக்காவும் வேண்டிக் கொள்கிறேன்’ என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
புயல் 300 கிமீ தூரம் வரை தமிழகத்தை நெருங்கும்
செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் , “ வட தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்றும் வீசும்.. மாலையில் 70. கிமீ வேகத்திலும் காற்று வீசும். கடல் மிகவும் கொந்தளிப்புடன் காணப்படும். தென்மேற்கு, மத்திய வங்க கடலில் சீற்றம் காணப்பட வாய்ப்புள்ளதால் மீன்வர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்” என்று தெரிவித்தார்.
ஃபனி புயல் வடக்கு மற்றும் வடக்கிழக்கு நோக்கி செல்ல செல்ல தமிழகத்தின் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துளது.
மே-2-ம் தேதி மிக அதி தீவிர புயலாக ஃபனி புயல் உருவெடுக்கும் போது 195. கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி கடலில் தொடர்ந்து சீற்றம் காணப்படுவதால் அங்கு பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலில் ரோந்து போலீஸ் தொடர்ந்து கவனிப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி துறைமுகத்திலும் இரண்டாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
ஃபனி புயலானது வங்கக்கடலில் இருந்து அடுத்த 6 மணி நேரத்தில் 620 கி.மீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்கிறது. அதிதீவிர புயலாக அடுத்த 12 மணி நேரத்தில் உருவெடுகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ஃபனி புயலானது தென் சென்னையில் இருந்து சரியாக 880 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக உருமாறி அதற்கடுத்த 24 மணி நேரத்தில் சூறாவளியுடன் கூடிய மிக மிக தீவிர புயலாக உருவெடுக்க உள்ளது. மே 1 ஆம் தேது இந்த புயல் வடக்கு நோக்கி நகர்கிறது”
மே 3 ஆம் தேதி வாக்கில் ஃபனி புயல் தீவிரமடைந்து, ஒடிசாவில் மழையைப் பொழியலாம். இதையொட்டி ஒடிசா மாநில அரசு, மீட்புப் படைகளை உஷார் நிலையில் இருக்கச் சொல்லி உத்தரவிட்டுள்ளது.
அடுத்த மூன்று நாட்களில் புயல் காற்றின் வேகம் 175 கிலோ மீட்டர் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர பிரதேசத்தில் புயல் காற்றின் தாக்கம் இருக்கலாம் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஃபனி புயலால் தமிழகம், ஆந்திராவில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 6 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறும் ஃபனி.
அதிதீவிர புயலாக உருவெடுக்கும் ஃபனி புயல்!
நாகையில் கடல் சீற்றம் காரணமாக இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டதை அடுத்து, கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற பைபர் படகு மீனவர்கள் கரை திரும்பி வருகின்றனர்.
ஃபனி புயல் திசை மாறி வடக்கு நோக்கி நகர்வதால் தமிழகத்தில் மழைக்கும் வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.