Cyclone Gaja : தமிழகம் மற்றும் புதுவை கடலோரப் பகுதிகளில் கனமழை முதல் அதீத கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது. கஜ புயல், வியாழன் இரவில் கரையைக் கடக்கிறது. நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. கஜ புயலால் பாதிப்பு ஏற்படும் என கருதப்படும் மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
கடலோர மாவட்டங்களில் மற்றும் கடலோர கிராமங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட வருகிறது என மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் அமைச்சர்கள் தெரிவித்து வருகிறார்கள். அதி தீவிர புயலாக மாறி நாளை பிற்பகல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கஜ புயல் தொடர்பான Live Update படிக்க
Cyclone Gaja Hits Nagapattinam, Tamil Nadu:
கனமழை மற்றும் புயலினை சமாளிக்கும் வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சர் உதயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருக்கிறார்.
06:45 PM : கஜா புயல் எச்சரிக்கையை தொடர்ந்து புதுச்சேரியில் நாளை கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு
05:35 PM : தேர்வுகள் ரத்து
கஜ’ புயல் காரணமாக காரைக்குடி அழகப்பா பல்கலைகழக இணைப்பு கல்லூரிகளில் நாளை நடைபெறஇருந்த தேர்வுகள் ரத்து – பல்கலைக்கழகம் அறிவிப்பு
04:40 PM : ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் ரத்து
கஜ புயல் காரணமாக ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. திருச்சி – ராமேஸ்வரம் பயணிகள் ரயில் மற்றும் மதுரை – ராமேஸ்வரம் பயணிகள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறை அறிவித்திருக்கிறது.
03:50 PM : கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்
கனமழை மற்றும் புயல் பாதிப்புகளுக்கு உள்ளாகும் பகுதிகளாக அறியப்பட்ட மாவட்டங்களான கடலூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்.
கடலூர் – ககன்தீப் சிங்
நாகை – டி. ஜவஹர்
புதுக்கோட்டை – சம்பு கல்லோலிக்கல்
ராமநாதபுரம் – சந்திரமோகன்
திருவாரூர் – மணிவாசன்
03:45 PM : வானிலை ஆய்வு மையத்தின் புதிய தகவல்
வருகின்ற 15ம் தேதி வரை கடலுக்குள் மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆராய்ச்சி மையம் கூறியிருக்கிறது. மேலும் புயல் மணிக்கு 80 கி.மீ முதல் 100 கி. மீ வேகத்தில் கரையை கடக்கும் என்று கூறியிருக்கிறது.
02:45 PM : புதுச்சேரி
கஜ புயல் தாக்கத்தில் இருந்து மக்களைக் காக்க எந்நேரத்திலும் அரசு தயாராக இருப்பதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்திருக்கிறார்.
02: 00 PM : 6 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை ( Cyclone Gaja Live Updates )
கஜ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு.
01:30 PM : 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும் கஜ புயல்
தற்போது கஜ புயல் சென்னைக்கு கிழக்கே 520 கி.மீ தொலைவிலும், நாகைக்கு வடகிழக்கே 620 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டிருக்கிறது. மணிக்கு 7 வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
01.15 PM : தனுஷ்கோடிக்கு செல்ல தடை
கஜ புயலின் எதிரொலி : ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் தனுஷ்கோடி பகுதிக்கு செல்ல இன்று மாலை 5 மணியிலிருந்து தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்திய கடற்படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர் என்றும், இரண்டு ஹெலிக்காப்டர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறது என்றும் ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அறிவித்திருக்கிறார்.
12:45 PM : மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசும்
கடலூர், நாகை, தூத்துக்குடி, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் 20 செ.மீ அதிகமாக மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்பகுதிகளில் புயல் காற்று மணிக்கு 70 கி.மீ வேகத்தில் தொடங்கி 110 கி.மீ வேகம் வரை வீசும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
12:15 PM : கால்நடைகளுக்கும் பாதுகாப்பு
மனிதர்களுக்கு எப்படி பலமான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மேற்கொள்ளப்படுகிறதோ அதே போல் கால்நடைகளின் பாதுகாப்பினையும் கஜ புயலின் போது உறுதி செய்வோம் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அறிவித்திருக்கிறார்.
12:00 PM : ராமநாதபுர மாவட்டம் : மீனவ சங்கக் கூட்டம்
கஜ புயல் கடலூர் மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டதால் மீன்வளத் துறை துணை இயக்குநர் காத்தவராயன் தலைமையில் மீனவ சங்கத் தலைவர்களின் கூட்டம் பாம்பம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
Read More: Gaja Cyclone Alerts: கஜ-வை எதிர்கொள்ள 10 டிப்ஸ், செல்ஃபி பிரியர்கள் உஷார்
அதில் விசைப்படகுகளை குந்துகால் மற்றும் சின்னப்பாலம் பகுதியில் பத்திரமாக நிறுத்துவதற்கு வசதியாக பாம்பன் தூக்குப்பாலம் 2 மணி நேரம் வரை (மதியம் 12 மணி முதல் – 2 மணி வரை) திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தனுஷ்கோடி, புதுரோடு, நடராஜபுரம், சங்குமால் மற்றும் துறைமுக பகுதியில் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
11:00 AM : பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை
கஜ புயலின் காரணத்தால் நாளை கடலூரில் இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விடுமுறை அறிவித்திருக்கிறார் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன். நாகை மாவட்டத்தில் இருக்கும் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.
09:30 AM : உள்வாங்கியது வேதாரண்யம் கடல்
கடலூர் மற்றும் பாம்பனுக்கு இடையே கஜ புயல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வேதாரண்யம் பகுதியில் இருக்கும் கடல் உள்வாங்கியுள்ளது. கடற்பகுதி முழுவதும் சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது. கடல் கொந்தளிப்பு மற்றும் கடல் சீற்றம் போன்ற மாற்றங்கள் ஏதும் இல்லை என தகவல்.
#வேதாரண்யம் கடல் உள் வாங்கி சேரும், சகதியுமாக உள்ளது… அலையின் சீற்றங்கள் இல்லை. pic.twitter.com/csCfsTgq4F
— IE Tamil (@IeTamil) 14 November 2018
09: 00 AM : அமைச்சர் எம்.சி. சம்பத்
புயல் காலங்களில் கடலூர் மக்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் எந்நேரமும் என்னை தொடர்பு கொள்ளலாம் என தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்திருக்கிறார்.
கடலூர் மாவட்ட மக்கள், புயல் தொடர்பாக அனைத்து வித உதவிகளுக்கும் எந்நேரமும் என்னை தொடர்பு கொள்ளலாம். முன்னெச்சரிக்கையோடு நாம் அனைவரும் ஒன்றிணைந்து புயலை பாதுகாப்பாக எதிர்கொள்வோம் !
— MC Sampath (@MCSampathOffl) 13 November 2018
08: 50 AM : சிதம்பரம் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
சிதம்பரத்தில் இருக்கும் பிச்சாவரம் பகுதியில் நவம்பர் 15 மற்றும் 16 தேதிகளில் படகு சவாரிக்கு தடை செய்யப்பட்டிருக்கிறது.
08:40 AM : கடலூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
கஜ புயல் எதிரொலியால் கடலூர் மாவட்டம் முழுவதிலும் உள்ள விளம்பர பலகைகள், பேனர்களை அகற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அம்மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டிருக்கிறார்.
தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டால், பொதுமக்களுக்கு உடனடியாக செய்திகளை தெரிவிக்க கடலூரில் இன்று முதல் 107.8 என்ற அலைவரிசையில் எஃப்.எம் ரேடியோ தொடங்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 16-ம் தேதி வரை காவல்துறை, மருத்துவர்கள், தீயணைப்புத்துறை உள்ளிட்ட அரசு துறையில் யாரும் விடுப்பு எடுக்கக்கூடாது என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
கடலூரில் புயல் தொடர்பான புகார்களுக்கு 1077, 04142 – 220700, 221113, 233933, 221383 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
08:30 AM : நாகை மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் உள்ளிட்ட அனைத்து மீனவ கிராமங்களிலும், கஜா புயல் குறித்து ஒலிப்பெருக்கி மூலம் மீனவர்களுக்கு எச்சரிக்கை. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் மேடான பகுதிகளுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை
08: 20 AM : கஜ புயல் குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் புகைப்படம்

08:15 AM : மணிக்கு 8 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் கஜ
நேற்று மதியம் மணிக்கு 5 கி.மீ வேகத்தில் பயணித்து வந்த கஜ புயலின் வேகம் அதிகரித்து மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் பயணித்தது. பின்னர் மீண்டும் அதன் வேகம் குறைந்து தற்போது மணிக்கு 8 கி.மீ வேகத்தில் பயணித்து வருகிறது.
08:10 AM : 20 செ.மீ மேலே மழை பொழிய வாய்ப்பு
கஜ புயலின் காரணமாக வடக்கு கடலோர பகுதிகள், புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம் பகுதிகளில் மட்டும் ஒரே நாளில் 20 செ.மீ மேல் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
08:00 AM : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் கஜ புயல்
நேற்று நள்ளிரவு 11.30 மணி நிலவரப்படி கஜ புயல் சென்னைக்கு கிழக்கு திசையில் 580 கி.மீ தொலைவிலும், நாகைக்கு வடகிழக்கில் 680 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டிருக்கிறது.