Advertisment

கஜ புயல் : 7 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு

13 கடலோர மாவட்டங்களில் கஜ புயலை எதிர்க்கொள்ள தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Cyclone Gaja Red Alert

Cyclone Gaja Red Alert

Cyclone Gaja Red Alert : வங்கக் கடலில் உருவாகியிருக்கும் கஜ புயல் சென்னை - நாகைக்கு இடையே 15ம் தேதி கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடலோர மாவட்டங்களில் கஜ புயலின் தாக்கம் பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

Cyclone Gaja Red Alert  13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

நவம்பர் மாலை இப்புயல் கரையைக் கடக்க இருப்பதால் வட தமிழக மாவட்டங்களுக்கு நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. கடலோர பகுதிகளில் கடல் காற்று அதிகமாக இருக்கும், கனமழை பெய்யும், மற்றும் அலைகளின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டிருக்கிறது.

Read More: Gaja Cyclone Alerts: கஜ-வை எதிர்கொள்ள 10 டிப்ஸ், செல்ஃபி பிரியர்கள் உஷார்

உள் மாவட்டங்களில் காற்றின் சீற்றம் அவ்வளவாக இருக்காது. இருப்பினும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மீனவர்கள் அனைவரும் கரைக்கு திரும்பும்படி ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : கஜ புயல் எப்போது கரையைக் கடக்கும் ?

13 கடலோர மாவட்டங்களில் கஜ புயலை எதிர்க்கொள்ள தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.

04:00 PM : ஏழு மாவட்டங்களில் பலத்த காற்று

கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை முதல் அதீத கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. இம்மாவட்டங்களில் காற்று மணிக்கு 80 முதல் 90 கி.மீ வேகத்தில் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

03 : 30 PM : புதுவை

கஜ புயலினை எதிர்க்கொள்ளும் வகையில் அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் புதுவை அரசு மேற்கொண்டிருப்பதாக புதுவையின் முதல்வர் நாராயணசாமி கூறியிருக்கிறார்.

02: 30 PM : அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு 

கஜ புயலை ஒட்டி, தமிழகத்தில் இருக்கும் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் தமிழகத்தில் உள்ள 24 பெரிய மற்றும் சிறிய அணைகளின் நிலவரத்தினை கண்காணிக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

02: 15 PM : தமிழகத்தில் உள்ள அணைகளின் நிலவரத்தினை கவனிக்க நடவடிக்கை

ஆகஸ்ட் மாதம் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கேரளத்தில் இருக்கும் அனைத்து அணைகளும் ஒரே நேரத்தில் நிரம்பியதால் பொது மக்கள் பெரும் அவதியுற்றனர் என்பதை நாம் அறிவோம். தமிழகத்தில் கஜ புயலின் தாக்கம் நிச்சயம் அதிகம் இருக்கும் என்ற காரணத்தால் அணைகளின் நிலவரம் குறித்த தகவல்களை சமர்பிக்க தமிழக தலைமைச் செயலருக்கு மத்திய நீர்வளத்துறை கடிதம். அணைகளின் நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் குறித்து கண்காணிக்க நடவடிக்கை.

01:45 PM : தமிழக அரசின் நடவடிக்கைகள்

தமிழக அரசு கஜ புயலிற்காக எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க

12:00 PM : கரையைக் கடக்கும் முன் கஜ வலுவிலக்கும்

தமிழ்நாட்டு மக்களால் நன்று அறியப்பட்ட தமிழ்நாடு வெதர்மென் ப்ரதீப் ஜான் தன்னுடைய முகநூல் பக்கத்தில் “கடலில் இருக்கும் போது புயல் வலுப்பெறும். ஆனால் அது கரையைக் கடக்கும் போது, அது தன்னுடைய வலுவினை இழந்துவிடும்” என குறிப்பிட்டிருக்கிறார். மேலும் வேதாரண்யம் மற்றும் கடலூருக்கு மத்தியில் இப்புயல் கரையைக் கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.

11:45 AM :  வீடியோ வெளியிட்டிருக்கும் தேசிய பேரிடர் மேலாண்மை

11:15 AM : தமிழகம் விரைந்தது தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு 

வர்தா புயலின் சீற்றத்திற்கு இணையாக கஜ புயல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் தேசிய பேரிடர் மீட்புக் குழு தமிழகம் விரைந்தது. வெள்ள காலங்களில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பது தொடர்பாக தங்களின் ட்விட்டர் பக்கங்களில் தகவல்கள் அளித்துள்ளது.

11:10 AM : புயல் பாதிப்பு தொடர்பாக 1077 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

11:00 AM : தமிழக அரசின் முன்னேற்பாடுகள் தீவிரம்

மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள், மருத்துவ குழு உறுப்பினர்கள், நடமாடும் குழுக்கள் ஆகியோர் தயார் நிலையில் இருப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் அறிவித்திருக்கிறார்.

10: 45 AM : காஞ்சிபுரம்

மூன்று தாலுகா மற்றும் 35 கடலோர கிராமங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. படகுகள் எதுவும் கடலுக்குள் செல்லாத வகையில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவிப்பு.

09:45 AM : கடலூருக்கும் நாகைக்கும் நடுவே புயல் கரையை கடக்கும்

தற்போது கஜ புயல் நாகை மாவட்டத்திற்கு வடகிழக்கே 840 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 15ம் தேதி கடலூருக்கும் பாம்பனிற்கும் இடையே முன்பகலில் கஜ கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க : வர்தா அளவிற்கு சீற்றத்தினைக் கொண்டிருக்கும் கஜ புயல்

09:15 AM : நாகை மாவட்டத்தில் முன் ஏற்பாடுகள்

நாகை மாவட்டத்தில் தொடர்ந்து கடலின் சீற்றம் அதிகமாக காணப்படுவதால் கடற்கரையில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றிருந்த, நாகை, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கரை திரும்பினார்கள்.

புயல் எச்சரிக்கை காரணமாக நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Rain In Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment