Cyclone Phethai : வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியது. இந்த பெய்ட்டி புயல் காரணமாக ஆந்திரா மற்றும் புதுச்சேரிக்கு ஆரஞ்சு அலர்ட் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் மெல்ல மெல்ல தமிழகத்தை நெருங்கி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, 16 கிலோ மீட்டர் வேகத்தில், சென்னைக்கு தென் கிழக்கில் 380 கிமீ தொலைவிலும், காக்கிநாடாவின் தென்கிழக்கில் 480 கிமீ தொலைவிலும் மற்றும் மச்சிலிப்பட்னம் பகுதிக்கு தென்கிழக்கே 510 கிமீ தொலைவிலும் இந்த புயல் உள்ளது. இப்புயல் சுற்றுச்சூழல் நிலையை பொருத்து, கரையை கடக்கும்போது லேசாக வலுவை இழக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மிதமான மழை காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. மீனவர்கள் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள பெய்ட்டி புயல், ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம்- காக்கிநாடா இடையே நாளை பிற்பகல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று இரவு புயலாக மாறியது. இதற்கு பெய்ட்டி என பெயரிடப்பட்டுள்ளது.
Cyclone Phethai : பெய்ட்டி புயல் : ஆந்திரா - புதுச்சேரிக்கு ஆரஞ்சு அலர்ட்
சென்னைக்கு தென் கிழக்கே 430 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ள இந்த புயல், மணிக்கு 16 கிலோ மீட்டர் வேகத்தில் ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருகிறது. இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவடையும் எனவும், நாளை பிற்பகல் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம்- காக்கிநாடா இடையே கரையைக் கடக்கும் எனவும் இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஆந்திரா மற்றும் வட தமிழக பகுதியான புதுச்சேரியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
read more.. பெய்ட்டி புயல்: மிக கனமழை
தற்போதைய நிலவரம்
தற்போதைய நிலவரப்படி, 16 கிலோ மீட்டர் வேகத்தில், சென்னைக்கு தென் கிழக்கில் 380 கிமீ தொலைவிலும், காக்கிநாடாவின் தென்கிழக்கில் 480 கிமீ தொலைவிலும் மற்றும் மச்சிலிப்பட்னம் பகுதிக்கு தென்கிழக்கே 510 கிமீ தொலைவிலும் இந்த புயல் உள்ளது. இப்புயல் சுற்றுச்சூழல் நிலையை பொருத்து, கரையை கடக்கும்போது லேசாக வலுவை இழக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மிதமான மழை காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
B21:#CyclonePhethai over SW #BoB moved NW with a speed of 16 kmph is about 520 km NE of #Trincomalee ,380 km SE of #Chennai, 480 km SE of #Kakinada and 510 km SE of #Machilipatnam. It is likely to weaken slightly before landfall due to unfavourable environmental conditions. pic.twitter.com/ZYKMkao9qS
— TN SDMA (@tnsdma) 16 December 2018
மேலும், ஆந்திரா மற்றும் புதுச்சேரிக்கு ஆரஞ்சு அலர்டு அளித்து எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். வட தமிழகத்தில் சூறைக் காற்றுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
B18:#CyclonePhethai over SW #BoB moved NW with a speed of 7 kmph is about 460 km NE of #Trincomalee, 490 km SE of #Chennai, 670 km SE of #Kakinada and 640 km SE of #Machilipatnam. It is likely to weaken slightly before landfall due to unfavourable environmental conditions. pic.twitter.com/Fnda8h4TkS
— TN SDMA (@tnsdma) 16 December 2018
தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. மீனவர்கள் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
புயலாக மாறியது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மழை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.