Chennai,dengue fever,dengue cases in tamil nadu,dengue cases in chennai,coimbatore medical college, டெங்கு காய்ச்சல், கும்பகோணம், சென்னை, கிருஷ்ணகிரி, உடுமலைப்பேட்டை, அறிகுறி
Dengue disease alert city hospitals run out of beds : மழைக்காலம் துவங்கியதும் தேங்கும் நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு நோயால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
Advertisment
சில மருத்துவமனைகளில் இருக்கும் படுக்கைகள் அனைத்திலும் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருப்பதால் புதிய நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க முன்வர மறுத்துவிடுகின்றனர். இரண்டு தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகம் தங்கி சிகிச்சை பெற்று வருவதால் 10 வயது குழந்தையை அனுமதிக்க மறுத்துவிட்டனர்.
அக்குழந்தையின் அத்தை இது குறித்து குறிப்பிடுகையில் “இன்னும் ரத்த பரிசோதனை முடிவுகள் வரவில்லை. ஆனால் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தால் தான் சரியாவார்” என்று கூறியிருந்தார். ஆனால் இங்கு இடமில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியதாக வருத்தம் தெரிவித்தார்.
காஞ்சி காமக்கோடி தொண்டு அமைப்பு நடத்தும் குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்கள் “எங்களால் மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை பெற உதவ முடியும்” என்று கூறியுள்ளார்கள். யாருக்கெல்லாம் தீவிர சிகிச்சை தேவைப்படுகிறதோ அவர்களுக்கு உதவ நாங்கள் ரெடியாக இருக்கின்றோம் என மருத்துவர் எஸ். பாலசுப்ரமணியன் அறிவித்துள்ளார். போதுமான இடம் இல்லாமல், அதி தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு மற்ற மருத்துவமனைகளை ரெஃபெர் செய்கின்றோம் என்றும், சில நேரங்களில் இடங்கள் இருக்கும் போது தகவல் அளிக்கின்றோம் வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையில் இயங்கிவரும் பல்வேறு மருத்துவமனைகள் தங்களின் சமூக வலைதள பக்கங்களில் தேவையான படுக்கைகள் மற்றும் இடங்கள் இருக்கிறதா என்பது தொடர்பாக தொடர்ந்து தகவல்கள் அளித்து வருகின்றன. அதனை ஃபாலோ செய்து பின்பு மருத்துவமனையில் அனுமதிக்க நோயாளிகளுடன் வரவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மிகவும் தீவிரமான நோய் தொற்றுடன் வரும் நோயாளிகளை அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை செய்து அவர்களை வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றி வருகின்றோம். அவர்களுடன் டூட்டி டாக்டர்கள் உடன் செல்கின்றனர் என்றும் கூறுகிறார் மேத்தா மருத்துவமனையின் மூத்த மருத்துவர்களில் ஒருவர்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 66%-மாக உயர்ந்துள்ளது. 5000-க்கும் அதிகமானோர் அளவில் காய்ச்சலுக்கு சிகிச்சை எடுத்து ள்ளனர். அதில் 350க்கும் மேற்பட்ட நோயாளிகள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார் மருத்துவர் கொண்டல்சாமி.