Deputy chief minister O Panneerselvam visited Sujith residence : ஒட்டுமொத்த இந்தியாவின் ஒற்றை பிரார்த்தனையாக இருக்கின்றான் மணப்பாறையை சேர்ந்த சுஜித் வில்சன் என்ற இரண்டு வயது குட்டி குழந்தை. ஆழ்துளை கிணற்றில் விழுந்து அனைவரும் இவன் வருகைக்காக நடுக்காட்டுப்பட்டியில் காத்துக் கொண்டிருக்கின்றனர். அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலரும் களத்தில் நின்றவாறே களப்பணிகளை பார்வையிட்டும், சுஜித்தின் பெற்றோர்களுக்கு ஆதரவாகவும் இருந்து வருகின்றனர். தீபாவளியென்றும் கூட யோசிக்காமல் அனைவரும் நடுக்காட்டுப்பட்டியில் குழுமியிருக்கின்றனர்.
நேற்று நள்ளிரவுக்கு மேல் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், நடுக்காட்டுப்பட்டியில் மீட்புப் பணிகளை மேற்பார்வையிட வந்தார். சுஜித் குடும்பத்திற்கு ஆதரவு அளித்த அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ”தமிழகத்தில் பயன்படுத்தாத ஆழ்துளை கிணறுகள் கணக்கிடப்பட்டு உடண்டியாக மூட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று அறிவித்தார். மேலும் தண்ணீர் தேவைக்காக தோண்டப்பட்ட அந்த ஆழ்துளை கிணற்றில் நீர் ஏதும் கிடைக்கவில்லை என்பதால் அதனை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டனர். அந்த ஆழ்துணை கிணற்றின் மேல் மூடப்பட்டிருந்த மண் மழைக்காரணமாக அடித்துச் செல்லவும் அந்த இடம் பாதுகாப்பற்றதாக இருந்தது. இதன் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் எதிர்பாராத விதமாக உள்ளே விழுந்துவிட்டான் என்று நிகழ்ந்தை விளக்கிக் கூறினார்.
“இதுவரை 35 அடி வரை தான் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. பூமியில் பாறைகள் அதிகம் இருப்பதால் தோண்டும் பணி கடும் சவாலாக இருக்கிறது. மேலும் 45 அடி பள்ளம் தோண்ட வேண்டும். முதலில் ஒரு மணி நேரத்துக்கு 2 அடி தான் தோண்ட முடியும் என்ற வகையில் ஒரு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது மணிக்கு 10 அடி வரை பள்ளம் தோண்டும் இயந்திரம் கொண்டு வரப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது . இன்னும் 45 அடிகளை தோண்ட குறைந்தது 5 மணி நேரமாவது ஆகும்” என அவர் அறிவித்தார். அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜனும், விஜயபாஸ்கரும் உடன் இருந்தனர்.
மேலும் படிக்க : ”நிச்சயமாக குழந்தையை மீட்போம்” – பெற்றோர்களுக்கு விஜயபாஸ்கர் ஆறுதல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.