Deputy CM O Panneer Selvam returns from USA today : அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வம் இன்றிரவு தாயகம் திரும்புகிறார். தமிழகத்தில் தொழில் தொடங்க இருப்பவர்களுக்காகவும், முதலீடுகளை இருப்பதற்காகவும் அரசு முறை பயணமாக இந்த மாதம் 8ம் தேதி அதிகாலை அவர் சென்னையில் இருந்து அமெரிக்கா சென்றார். அவருடன் தேனி எம்.பி ரவீந்திரநாத் குமாரும் உடன் சென்றிருந்தார்.
அமெரிக்காவில் அவர் சிகாகோ, வாஷிங்டன், ஹூஸ்டன், நியூயார்க் உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். சிகாகோவில் அவர் தமிழ்ச்சங்கத்தின் 10வது உலகத் தம்மிழ் ஆராய்ச்சி மாநாடு மற்றும் பாராட்டு விழாவில் பங்கேற்றார். அவருக்கு தங்க தமிழ்மகன் விருது வழங்கப்பட்டது. தமிழ்நாடு உள்கட்டமைப்பு மற்றும் உறைவிட நிதிக்காக ரூ. 720 கோடிக்கான நிதிகள் இந்திய தூதரகத்தில் நடைபெற்ற உலக முதலீட்டார்கள் சந்திப்பில் திரட்டப்பட்டது.
பின்னர் வாஷிங்டனில் சர்வதேச நிதி நிறுவன அலுவலகத்தில் தமிழகத்திற்கான நிதி செலவினம் மற்றும் நிதி திறன் மேம்பாட்டு திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்தார். உலக வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு சென்ற அவர் குடிநீர், வீட்டுவசதி, போக்குவரத்து மேம்பாட்டு திட்டங்களுக்கான நிதியை பெறுவது குறித்த ஆலோசனையில் அவர் ஈடுபட்டார்.
ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கைக்காக தனது பங்களிப்பாக ரூ. 7 லட்சம் நிதி உதவி வழங்கினார். பின்னர் நியூயார்க்கில் உலக தமிழ் இளைஞர் பேரவை சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டார். இன்று இரவு சென்னை திரும்ப இருக்கும் தமிழக துணை முதல்வர் இந்திய தூதரக அதிகாரி சந்தீப் சக்கரவர்த்தியை நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இன்று இரவு சரியாக 8 மணி அளவில் அவர் தாயகம் திரும்புகிறார்.
விருதுகள்
துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு மாகாத்மா காந்தி மெடலியன் ஆஃப் எக்ஸெலன்ஸ் என்ற விருதையும், தனிச்சிறப்பு மிக்க பொதுசேவை ஆற்றும் சாதனையாளர் விருதையும், சர்வதேச வளர்ந்து வரும் தலைவர் ஆசியா (International Rising star of the year -Asia) விருதையும், தங்க தமிழ் மகன் விருதையும் அவருக்கு வழங்கி சிறப்பித்தனர் அமெரிக்கா வாழ் தமிழர்கள் மற்றும் க்ளோபல் கம்யூனிட்டி.
மேலும் படிக்க : ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் பாதிப்பை ஏற்படுத்தாது: ஓ.பன்னீர்செல்வம் உறுதி