Advertisment

தர்மபுரியில் நெல் மூட்டைகள் திருடுப் போகவில்லை - ஆட்சியர் சாந்தி

7 ஆயிரம் நெல் மூட்டைகள் மாயமாகி இருப்பதாக வெளியான செய்தி வதந்தி; வாணிப கிடங்கில் ஆய்வுக்குப் பின் தர்மபுரி ஆட்சியர் பேட்டி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Dharmapuri

தருமபுரி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஆட்சியர் சாந்தி ஆய்வு நடத்தினார்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் தமிழ்நாடு வாணிப கழக திறந்த வெளி குடோனில் 22 ஆயிரம் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதில் 7 ஆயிரம் மூட்டைகள் மாயமானதாக புகார் எழுந்தது. தமிழக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் இதுகுறித்து கேள்வி எழுப்பினார். இதனால் தருமபுரி மாவட்டத்தில் பரபரப்பு நிலவியது.

Advertisment

இந்த நிலையில் நெல் மூட்டைகள் மாயமானதாக கூறப்பட்ட தருமபுரி வாணிப கழக திறந்த வெளி குடோனில் இன்று மாவட்ட ஆட்சியர் சாந்தி மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது ஆட்சியர் சாந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;

இதையும் படியுங்கள்: பள்ளி மாணவர்களை குறி வைத்து விற்கப்படும் போதைப் பொருள்: கோவை போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

தமிழ்நாடு வாணிப கழக சார்பில் தருமபுரி மாவட்டத்திற்கு 22 ஆயிரம் நெல் மூட்டைகள் தஞ்சை, நாகப்பட்டினம் ஆகிய டெல்டா மாவட்டங்களில் இருந்து ரயில் மூலம் வரவழைக்கப்பட்டது. இந்த நெல் மூட்டைகளை ஆட்சியர் அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள மாவட்ட வாணிப கழக திறந்த வெளி குடோனில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த குடோனில் இருந்த 7 ஆயிரம் நெல் மூட்டைகள் மாயமானதாக தகவல்களை பரப்பினர். இதுகுறித்து எழுந்த புகார் காரணமாக விஜிலென்ஸ் அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து ஆய்வு செய்வதற்காக இன்று இங்கு வந்து பார்வையிட்டபோது, 7 ஆயிரம் நெல் மூட்டை மாயமாக வாய்ப்பில்லை. ஏனென்றால், ஒரு அட்டிக்கு 3 ஆயிரம் நெல் மூட்டைகள் வரை அடுக்கி வைக்கப்படுவது வழக்கம்.

ஆனால், தற்போது அடுக்கி வைக்கப்பட்டுள்ள முறையில் ஒரு சில அட்டிகளில் 3 ஆயிரத்திற்கும் மேலாக மூட்டைகள் இருக்கும், சில அட்டிகளில் 2500-க்கும் குறைவாக மூட்டைகள் அடுக்கி வைக்கப்படும். அவ்வாறு குறைவாக அடுக்கி வைக்கப்பட்ட நெல் மூட்டைகளை ஒரு சிலர் தவறுதலாக எண்ணி விட்டு நெல் மூட்டைகள் மாயமானதாக உண்மையை திரித்து எங்கள் மீது உள்ள காழ்புணர்ச்சி காரணமாக புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாகதான் அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், குடோனில் எந்த மூட்டைகளும் மாயமாகவில்லை. மேலும், சரிந்து கிடக்கும் மூட்டைகளை சரிசெய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. 7 ஆயிரம் நெல் மூட்டைகள் மாயமாகி இருப்பது வதந்தியான செய்தியாகும். தற்போது நெல்மூட்டைகள் அரவைக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், நெல் மூட்டைகள் மாயமான சம்பவம் குறித்தும் விசாரணை நடத்தவும், மாவட்டத்தில் உள்ள 80 அரிசி ஆலைகளிலும் ஆய்வு செய்யவும் அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களிலிருந்து 11 வேகன்கள் மூலம் 22 ஆயிரத்து இருநூற்று எழுபத்து மூன்று மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டது, அதில் 7 ஆயிரத்து 174 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் அறவை ஆலைகளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது, மீதம் 15 ஆயிரத்து 98 மெட்ரிக் டன் இருப்பு உள்ளது. இருப்பு முழுவதும் அரவைக்கு அனுப்பிய பிறகு நூறு சதவீதம் ஆய்வுக்குட்படுத்துபட்டு தணிக்கைக்கு பிறகு முழுமையான விபரங்கள் கொடுக்கப்படும் என தர்மபுரி ஆட்சியர் சாந்தி ஆய்வுப் பணியின்போது தெரிவித்தார்.

நெல் மூட்டைகள் காணாமல் போனது குறித்து அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் விசாரித்தபோது, தற்போது நெல் மூட்டைகள் அரவைக்கு அனுப்பி வைக்கும்பணி நடைபெற்று வருகிறது. இதனால் அட்டிகளில் நெல் மூட்டைகள் குறைவாக காணப்பட்டிருக்கின்றது. அதை திருடு போய்விட்டதாக யாரோ திரித்து போட்டிருக்கின்றார்கள் என்றனர்.

க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dharmapuri
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment