கருணாநிதி உடல்நிலையில் முன்னேற்றம்: சக்கர நாற்காலியில் அமர வைத்து பரிசோதனை

M Karunanidhi Health UPDATES: திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க அஜித், கவுண்டமணி, விஜய் ஆண்டனி வருகை

M Karunanidhi Health UPDATES: திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டத்தை தொடர்ந்து அவரின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்திருக்கிறது. அவரை சக்கர நாற்காலியில் அமர வைத்து சிகிச்சையின் ஒரு கட்டமாக மருத்துவர்கள் சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து தொண்டர்கள் இன்று (ஆகஸ்ட் 2) நண்பகலில் இனிப்புகளை பறிமாறினர்.

கருணாநிதி கடந்த 27ம் தேதி ரத்த அழுத்தம் குறைவு காரணமாக கோபாலபுரத்தில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பின்னர் அபாயக் கட்டத்தை கடந்து வந்தார். அதன் பிறகு இவரின் உடல்நிலை சீராக இருந்து வருவதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மருத்துவர்கள் கண்காணிப்பில் கருணாநிதி: ’21 தொண்டர்கள் மரணம் துயரம் அளிக்கிறது’- மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் பாதிக்கப்பட்ட நாளில் இருந்தே பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் அவர் இல்லத்திற்குச் சென்று நலம் விசாரித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு முக்கிய பொறுப்பில் இருக்கும் தலைவர்களும் கருணாநிதியை சந்திக்க காவேரி மருத்துவமனைக்கு வந்தனர். நேற்று நடிகர் விஜய் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியை சந்தித்து அவரின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் விசாரித்தார். இன்றும் கருணாநிதியின் உடல்நிலையை பலரும் விசாரித்தார்கள்.

Karunanidhi Health News Today, Kalaignar Karunanidhi Live, DMK Chief Karunanidhi Health Today, கருணாநிதி, கருணாநிதி உடல்நிலை

DMK Chief Karunanidhi Health Today: கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலினிடம் நடிகர் விஜய் விசாரித்த காட்சி

DMK Chief Karunanidhi Health Today கருணாநிதி உடல்நிலை LIVE UPDATES:

5:30 PM : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய தலைவர் காதர் மொய்தீன் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியை நலம் விசாரித்தார்.

4:45 PM: காவேரி மருத்துவமனை முன்பு கடந்த 28-ம் தேதி முதல் காத்துக் கிடந்த மீடியா கூட்டமும் இன்று பிற்பகல் முதல் குறைய ஆரம்பித்திருக்கிறது.

3:30 PM: இன்று முன்னணி நிர்வாகிகள் வருகையும் வெகுவாக குறைந்து காணப்பட்டது. வெகு விரைவில் கருணாநிதி கோபாலபுரம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்தபடியே சிகிச்சையை தொடர்வார் என மருத்துவமனை வட்டாரங்கள் கூறின.

2:30 PM: கருணாநிதியின் உடல்நிலை முன்னேற்றம் கண்டு வருவதைத் தொடர்ந்து மருத்துவமனை முன்பு கூடிய தொண்டர்களை வீட்டுக்கு செல்லும்படி கனிமொழி வலியுறுத்தினார். முந்தைய நாட்களைவிட தொண்டர்கள் கூட்டம் குறைந்தது.

2:00 PM: கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு அவர் சக்கர நாற்காலியில் அமர வைக்கப்பட்ட தகவல் தெரிய வந்ததும் மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் இனிப்புகளை பறிமாறி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

1:15 PM: கருணாநிதியின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, சக்கர நாற்காலியில் அமரவைத்து மருத்துவர்கள் பரிசோதனை நடத்தினர். இது சிகிச்சையின் ஒருகட்டம் என மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

12:00 PM: கேரள முதல்வர் பினராயி விஜயன் வருகை தந்து நலம் விசாரித்தார். அவருடன் ஜி.ராமகிருஷ்ணன் வந்தார். ‘கருணாநிதி பிறவிப் போராளி’ என பினராயி விஜயன் கருத்து தெரிவித்தார்.

11:00 AM: நேற்று இரவு நடிகர் அஜித் காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அப்போது சில நிமிடங்கள் கருணாநிதியை சந்தித்து பின்னர் ஸ்டாலினிடம் அவரின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

M Karunanidhi Health, கருணாநிதி ajith in kauvery hospital

DMK Chief Karunanidhi Health Today: காவேரி மருத்துவமனையில் நடிகர் அஜித்

மருத்துவமனையில் சிறிது நேரம் இருந்து ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரித்து சென்ற நடிகர் அஜித்தின் வீடியோ வெளியானது.

நடிகர் அஜித்தை தொடர்ந்து நகைச்சுவை நடிகர் கவுண்டமணி மருத்துவமனை வந்தார். இவருடன் கி. வீரமணி அவர்களும் உடன் இருந்தார்.

M Karunanidhi Health, கருணாநிதி goundermani in kauvery hospital

DMK Chief Karunanidhi Health Today: காவேரி மருத்துவமனையில் கி. வீரமணி மற்றும் கவுண்டமணி

பின்னர் இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான விஜய் ஆண்டனி காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதி உடல்நலம் விசாரித்தார். நடிகர் சிவகார்த்திகேயனும் நேற்று இரவு வந்து நலம் விசாரித்தார்.

M Karunanidhi Health, கருணாநிதி, vijay antony in kauvery hospital

DMK Chief Karunanidhi Health Today: காவேரி மருத்துவமனையில் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி

இவர்களைத் தொடர்ந்து இன்றும் மேலும் சிலர் மருத்துவமனைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

DMK Chief Karunanidhi Health Today கருணாநிதி உடல்நிலை LIVE UPDATES:

 

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close