DMK Chief M Karunanidhi passed away : திமுக தலைவர் கருணநிதி உடல்நலக்குறைவால் இன்று மாலை 6.10 மணிக்கு காவேரி மருத்துவமனையில் காலமானார்.
DMK Chief M Karunanidhi passed away : திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்:
திமுக தலைவர் கருணாநிதி கடந்த மாதம் 27ம் தேதி முதல் காவேரி மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை நேற்று மாலை மிகப் பெரிய பின்னடைவை சந்தித்தது. 24 மணி நேரம் அவகாசத்திற்கு பிறகே அவரின் உடல்நிலை குறித்த உறுதி தகவல் அளிக்க முடியும் என்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில் இன்று மாலை 4.30 மணியளவில், கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் பதற்றமான சூழல் தமிழகம் முழுவதும் உருவானது. பின்பு மாலை 6.40 மணியளவில், கருணாநிதி உடல்நலக் குறைவால் 6.10 மணிக்கு காலமானார் என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
கருணாநிதி காலமானார்! மருத்துவமனையில் உயிர் பிரிந்தது!
இவரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மறைந்த கருணாநிதி அய்யாவின் குடும்பம் மற்றும் அவரது தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். மிகப் பெரிய தலைவரை இந்திய நாடு குறிப்பாக தமிழகம் இழந்து வாடுகிறது. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
My thoughts are with the family and the countless supporters of Karunanidhi Ji in this hour of grief. India and particularly Tamil Nadu will miss him immensely. May his soul rest in peace. pic.twitter.com/7ZZQi9VEkm
— Narendra Modi (@narendramodi) 7 August 2018
மேலும் பிரதமர் மோடி நாளை சென்னை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய இடம்பெற்றுள்ள திமுக தலைவரை இழந்து அவரது தொண்டர்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.