திமுக செயற்குழு கூட்டம்: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி, கடந்த 7ம் தேதி மாலை 6.10 மணிக்கு காலமானார்.
குடும்பம், பதவி, போட்டி: மு.க.ஸ்டாலினை சூழும் 5 சவால்கள் To Read, Click Here
இதைத் தொடர்ந்து ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட கருணாநிதியின் உடல், 8ம் தேதி இரவு மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தின் பின்புறத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், திமுக தலைமை செயற்குழு அவசரக் கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் என பொதுச்செயலாளர் அன்பழகன் இன்று அறிவித்துள்ளார்.
அறிவிப்பு: செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் தி.மு.க தலைமை செயற்குழு அவசரக் கூட்டம். @mkstalin pic.twitter.com/cFR7zB6yUW
— DMK – Dravida Munnetra Kazhagam (@arivalayam) August 10, 2018
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆகஸ்ட் 14ம் தேதி காலை 10 மணியளவில் திமுக செயற்குழு அவசரக் கூட்டம் சென்னை கலைஞர் அரங்கில் நடைபெறும். செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தகவலுக்கு இணைந்திருங்கள்…