DMK general council meeting : சென்னை, ராயப்பேட்டையில் அமைந்திருக்கும் ஒய்.எம்.சி.ஏ அரங்கத்தில் வருகின்ற அக்டோபர் மாதம் 6ம் தேதி திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற இருப்பதாக க. அன்பழகன் இன்று அறிவித்துள்ளார்.
திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், வருகின்ற அக்டோபர் மாதம் 6ம் தேதி, காலை 10 மணிக்கு, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ அரங்கத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : இன்று தமிழகத்தில் நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள
DMK general council meeting
அந்த பொதுக்குழுக் கூட்டத்தில் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. கழக ஆக்கப்பணிகள், கழகச் சட்டதிட்ட திருத்தம், தணிக்கைக் குழு அறிக்கை குறித்து விவாதிக்கப்படும் என்றும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2019/09/097e5174-8276-45fe-a762-772dc653d676-1-e1568887425650-741x1024.jpg)