Tamil Nadu Bandh LIVE UPDATES: தமிழ்நாடு முழுவதும் கடை அடைப்பு நடக்கிறது. திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் இந்தப் போராட்டத்தை நடத்துகின்றன.
Tamil Nadu Bandh LIVE UPDATES: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து கடந்த மே 22ம் தேதி நடைபெற்ற 100வது நாள் போராட்டத்தில் போலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். இந்தத் துப்பாக்கி சூட்டைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடக் கோரியும் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் சார்பில் இன்று (மே 25) அனைத்துக்கட்சி முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
Tamil Nadu Bandh LIVE UPDATES: தமிழ்நாடு முழுவதும் கடை அடைப்பு நடக்கிறது. திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் இந்தப் போராட்டத்தை நடத்துகின்றன.
மாலை 6.15 : திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி நோக்கி வந்து கொண்டிருந்த அந்த பஸ் தீ வைக்கப்பட்டதில் 3 பயணிகள் காயம் அடைந்தனர். அவர்கள் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டனர்.
மாலை 6.00 : தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தில் அரசு பஸ்ஸுக்கு தீ வைக்கப்பட்டது. மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், பஸ் பயணிகளை இறக்கி விட்டு தீவைத்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் புதிதாக பொறுப்பேற்ற எஸ்.பி. முரளி ராம்பா அங்கு விரைந்தார்.
மாலை 3.50 : திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை ரத்து செய்த உத்தரவை நீக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் இந்தத் தகவலை தமிழ்நாடு அரசு தெரிவித்தது.
மாலை 3.30 : தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறச் சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால், விமான நிலையத்தில் அவரை போலீஸார் கைது செய்தனர்.
மாலை 3.15 : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறுகையில், ‘ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான ஒப்பந்தம் தமிழக அரசுக்கும், போராட்டக் குழுவினருக்கும் இடையே கையெழுத்திடப்பட வேண்டும். அதுதான் நிரந்தர தீர்வாக இருக்கும்’ என குறிப்பிட்டார்.
பிற்பகல் 2.40 : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு அறிக்கை அனுப்பியுள்ளது. ஆனால் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெறுவதால் அறிக்கை விபரங்களை வெளியிட முடியாது என மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டிருக்கிறது.
பிற்பகல் 2.15 : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக மனித உரிமை ஆணையமே குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் சபரீஸ் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். தேசிய மனித உரிமை ஆணையம் தூத்துக்குடி சென்று ஆய்வு நடத்தி, அது குறித்து வரும் 29ஆம் தேதி பதிலளிக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
பிற்பகல் 2.00 : நெல்லை, கன்னியாகுமரியில் இன்டர்நெட் சேவையை முடக்கியது ஏன்? என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி விடுத்திருக்கிறது. இன்டர்நெட் முடக்கம் தொடர்பாக அரசு தரப்பு 3மணிக்கு பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்தது. ‘தூத்துக்குடியில் போராட்டம் தற்போதும் நடந்தால் இன்டர்நெட் முடக்கம் என்பது ஏற்புடையது’ என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
பகல் 1.45 : தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்ற முழு அடைப்பையொட்டி சென்னையில் சாலை மறியல், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதாக திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். 30 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட 349 பெண்கள் உள்பட 3,001 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
பகல் 1.30 : பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க 3 நாள் கூடுதல் அவகாசம் வழங்கியிருக்கிறது சென்னை அண்ணா பல்கலைக்கழகம். மே 30-ம் தேதியுடன் அவகாசம் முடியவிருந்த நிலையில் ஜூன் 2 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. 3 மாவட்டங்களில் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளதால் இந்த சலுகை வழங்கப்பட்டிருக்கிறது.
பகல் 1.00 : தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் தர உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது. துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சண்முகத்தின் தந்தை பாலையா தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்தனர்.
பகல் 12.30 : இன்று நடைபெறும் முழு அடைப்பில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டும் விதிவிலக்கு வழங்கப்பட்டது. அங்கு படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருவதாக கண்காணிப்பு அதிகாரியாக அங்கு பணியில் இருக்கும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப் சிங் பேடி கூறினார்.
கழுத்தில் மணமாலை,கருத்தில் கொள்கை,நினைவெல்லாம் மக்கள் நலன். அதனால்தான் மணமேடையிலிருந்து நேராக கழகம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றனர் புதுமணத் தம்பதியர்.
தூத்துக்குடி கொடூரத்திற்காக அச்சிறுபாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றமைக்கு வாழ்த்துகிறேன்#TNBandh4SterliteKillings pic.twitter.com/efTPMJXFHW
— M.K.Stalin (@mkstalin) 25 May 2018
பகல் 11.30 : மு.க.ஸ்டாலினை கைது செய்து அழைத்துச் செல்ல விடாமல், திமுக.வினர் போலீஸ் வாகனம் மீது ஏறியும், முன்னால் நின்று மறித்தும் போராட்டம் நடத்தினர். மிகுந்த சிரமங்களுக்கு பிறகு மு.க.ஸ்டாலினை போலீஸார் அழைத்துச் சென்றனர்.
பகல் 11.20 : மதுராந்தகத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக தோழமைக் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
பகல் 11.15 : காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தில் இன்று ஒரு திருமணத்தை நடத்தி வைத்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறகு மணமக்களுடன் சாலை மறியல் நடத்தினார்.
காஞ்சிபுரம் : மதுராந்தகத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் தோழமைக் கட்சிகள் மறியல் போராட்டம்.
* மாண்புமிகு செயல் தலைவருடன் சேர்ந்து புதுமண தம்பதியும் மறியல் போராட்டம்..#MKStalin pic.twitter.com/pdYlOkJmk0
— Vinodth Vj... (@vinothmural) 25 May 2018
பகல் 11.00 : தூத்துக்குடி துப்பாக்கி சூட்டைக் கண்டித்து சென்னை எழும்பூரில் ரயில் மறியல் போராட்டத்திற்கு தொண்டர்களுடன் வந்த திருமாவளவன், கனிமொழி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
காலை 10.15 : சென்னை எழும்பூரில் நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கலந்து கொள்கிறார். இந்தப் போராட்டத்தில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, மமக தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோரும் இதில் பங்கேற்கிறார்கள்.
காலை 10.00 : சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சைதாப்பேட்டையில் சாலை மறியல் நடந்தது. இதில் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ., காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கராத்தே தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காலை 9.30 : தமிழ்நாடு பந்த் காரணமாக சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இல்லங்களுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
காலை 9.15 : சென்னையில் பல இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்ட நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் முழுமையாக இயங்கியது.
காலை 9.00 : கன்னியாகுமரி மாவட்டத்தில் குறைந்த அளவில் பஸ்கள் ஓடின. நாகர்கோவிலில் வட்டக்கரை, மேலகிருஷ்ணபுதூர், இறச்சகுளம் பகுதிகளில் 3 அரசுப் பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கல்வீசியதில் கண்ணாடி உடைந்தது.
காலை 8.40 : புதுச்சேரியில் முழு அடைப்பு காரணமாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்கவில்லை, கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டிருக்கின்றன.
காலை 8.30 : தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறுகையில், ‘யார் ஆட்சி காலத்தில் ஸ்டெர்லைட் ஆலை கொண்டுவந்தால் என்ன, தற்போது மக்கள் வேண்டாம் என்கிறார்கள், ஆலையை மூட வேண்டியது தானே!’ என்றார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துயரம் : 2-வது நாளாக துப்பாக்கி சூடு, பலி 12 ஆனது, தலைவர்கள் முகாம்
காலை 8.20 : மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில், ‘ஸ்டெர்லைட் விவகாரத்தில் போராட திமுக, காங்கிரசுக்கு உரிமை இல்லை’ என்றார்.
காலை 8.00 : தூத்துக்குடி துயரத்திற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் வெற்றிகரமாக இன்று கடை அடைப்பு நடந்து கொண்டிருக்கிறது. சென்னையில் 95 சதவிகிதம் கடைகள் அடைக்கப்பட்டன. திருவல்லிக்கேணி உள்ளிட்ட வெளியூர்வாசிகள் முகாமிட்டிருக்கும் இடங்களில் காலையில் சில டிபன் கடைகளும், டீக்கடைகளும் மட்டுமே மிஞ்சியிருந்தன.
செங்கல்பட்டு முழுவதும் கடை அடைப்பு இது நம் தளபதிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.... #TNBandh4SterliteKillings @ptrmadurai @isai_ @Madhu7777 @thamoanbarasan @a_thamizhmaran @DMKRavichandran pic.twitter.com/aSe2egfQqa
— கலையரசி MBA (@LalithaVenkat05) 25 May 2018
காலை 7.30: காவல்துறை மற்றும் மாநில அரசைக் கண்டித்து இன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தை திமுக தலைமை தாங்குகிறது. திமுக-விற்கு ஆதரவாக காங்கிரஸ், திராவிடர் கழகம், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி தோழமை கட்சிகள் பங்கேற்கின்றனர்.
“திராவிட முன்னேற்றக் கழகமும் தோழமைக் கட்சியினரும் மே 25ந் தேதி(நாளை) அறிவித்துள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழக மக்களின் பேராதரவை அளிக்க வேண்டுகிறோம்.” என்று மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகமும் தோழமைக் கட்சியினரும் மே 25ந் தேதி(நாளை) அறிவித்துள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழக மக்களின் பேராதரவை அளிக்க வேண்டுகிறோம். #stereliteprotest pic.twitter.com/6lZn4umGw5
— M.K.Stalin (@mkstalin) 24 May 2018
TN Bandh Sterlite Protest LIVE UPDATES: தமிழ்நாடு முழுவதும் கடை அடைப்பு நடக்கிறது. திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் இந்தப் போராட்டத்தை நடத்துகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.