Uma Maheswari Former Nellai Dmk Mayor Murder : ஓட்டு மொத்த நெல்லையும் ஆடி போயுள்ளது. பட்டப்பகலில் திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி தனது கணவர், பணிப்பெண்ணுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த புகைப்படம் பார்ப்பவர்களையும் அலற வைத்துள்ளது. நகைக்காக இதுவரை தமிழகத்தில் ஏராளமான கொலைகள் நடந்துள்ள நிலையில், வெறும் 15 சவரன் நகைக்காக முன்னாள் மேயர் வீட்டில் 3 உயிர்கள் பறிபோயுள்ளது போலீசாரின் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.
நெல்லை மாநகராட்சியில் முதல் மேயராக 1996ம் ஆண்டு முதல் 2001 வரை பணியாற்றியவர் உமார் மகேஸ்வரி. சில ஆண்டுகள் திமுக., மாவட்ட மகளிரணி அமைப்பாளராக பதவி வகித்துள்ளார்.உமா மகேஸ்வரியின் செயல்பாடுகளை எத்தனையோ முறை மனதார பாராட்டி இருக்கிறார் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி.இவரின் கட்சிப்பணி தொடர வேண்டும் என்றும் பலமுறை கோரிக்கைகள் வைத்தாலும் குடும்ப சூழல் காரணமாக உமா மகேஸ்வரி அரசியலில் இருந்து முழுமையாக ஒதுங்கி தனது மகள்கள் உடன் நெல்லை ரெட்டியார்பட்டியில் வசித்து வந்தார்.
உமா மகேஸ்வரி கணவர் முருக சங்கரன், நெடுஞ்சாலைத்துறையில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நிலையில், நேற்றைய தினம், உமா மகேஸ்வரி தனது வீட்டின் ஹாலில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். படுக்கறையில் அவரது கணவரும், சமயலறையில் உமா மகேஸ்வரின் பணிப்பெண்ணும் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தனர்.
மாலை 6 மணியளவில் கல்லூரி விட்டு வீடு திரும்பிய உமாவின் மகள் தனது வீட்டில் தாய், தந்தை உட்பட 3 பேரும் கொடூரமாக இறந்து கிடப்பதை கண்டு கதறி அழுதார். அவரின் சத்தத்தை கேட்டு, ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர்.
மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை ஆரம்பமானது. உள்ளே நுழைந்த மர்ம கும்பல், உருட்டுக்கட்டை, இரும்புக்கம்பி, அரிவாள் போன்ற பயங்கரமான ஆயுதங்களால் 3 பேரின் தலைகளிலும் தாக்கியுள்ளனர். அது மட்டுமில்லை.. கொலையாளிகள். 3 பேரையுமே தனித்தனி ரூமில் வைத்து கொலை செய்துள்ளதையும் போலீசார் முதற்கட்ட விசாரணையில் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, கணவர் உள்பட 3 பேர் கொலை: பதற வைக்கும் கொடூரக் காட்சிகள்
வெறும் 15 சவரன் நகைக்காக நடத்தப்பட்ட கொலையா?
உமா மகேஸ்வரி கழுத்தில் கிடந்த சங்கிலி, கம்மல், வளையல் போன்றவை காணாமல் போனதை அவரின் மகள் உறுதிப்படுத்தியுள்ளார். வீட்டின் பீரோ திறந்து கிடந்துள்ளது.வீட்டில் இருந்த 15 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.இதனால் இது நகைக்காக நடத்தப்பட்ட கொலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர். ஆனால் பட்டப்பகலில் முன்னாள் மேயர் வீட்டில் வெறும் நகைக்காக கொள்ளையர்கள் இதுப்போன்ற கொடூர கொலையை நிகழ்த்தி இருப்பது போலீசாருக்கு மற்றொரு சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.
அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் உமா மகேஸ்வரிக்கு சொந்தக்காரர்கள் உடன் எந்தவித மனஸ்தாபமும் இருந்ததில்லை என்பது உறுதியாகியுள்ளது. அவரின் பெயரில் சொத்துக்கள் அதிகம் இருப்பது போலீசாருக்கு வேறு விதமான சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது. இந்த கொலை குறித்த விசாரிக்க நெல்லை ஆணையர் 3 தனிப்படைகளை அமைத்துள்ளார்.
ஸ்டாலின் கண்டனம்:
இந்நிலையில் உமா மகேஸ்வரின் மரணத்துக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இதுக் குறித்த இரங்கல் செய்தியையும் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
"முன்னாள் மேயர் 'நெல்லை' உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேரை படுகொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்"https://t.co/XfzyMrsoCL
- கழக தலைவர் @mkstalin அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி. pic.twitter.com/75MlrYGncW— DMK (@arivalayam) 23 July 2019
அவரின் உடலுக்கு இறுதி மாரியாதை செலுத்த திமுக தலைவர் ஸ்டாலின் இன்று நெல்லை செல்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உமா மகேஸ்வரின் மரணம் நெல்லை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.