திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் பதவி நீக்கம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் பின்னணி தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
திமுக.வுக்கு அதிகாரபூர்வமாக இரு செய்தி தொடர்பு செயலாளர்கள்! ஒருவர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரான டி.கே.எஸ்.இளங்கோவன். மற்றொருவர், வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.
திமுக தலைமைக் கழகம் சார்பில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள், மாநாடுகள் ஆகியவற்றை தொகுத்து வழங்கும் பொறுப்பை பல ஆண்டுகளாக செய்து வருபவர் டி.கே.எஸ்.இளங்கோவன் தான். திமுக சார்பில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகளை செய்தியாளர்களிடம் தெரிவிக்கும் பொறுப்பும் பெரும்பாலும் இவரிடம் வழங்கப்படும்!
திமுக.வின் கருத்தை எந்த இக்கட்டான சூழலிலும் தன்னை தொடர்பு கொள்ளும் மீடியாவிடம் தயங்காமல் தெரிவிப்பது டி.கே.எஸ்.இளங்கோவனின் ஸ்பெஷாலிட்டி! கருணாநிதியை தொடர்ந்து திமுக புதிய தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் நெருக்கமானவராக வலம் வந்த டி.கே.எஸ்.இளங்கோவனுக்கு நேற்று (அக்டோபர் 15) பகலில் ஒரு இன்ப அதிர்ச்சி!
ஆம், ஏற்கனவே ஊடக விவாதங்களில் பங்கு பெறுவோர் பட்டியலில் இடம் பெற்றிருந்த டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக சார்பில் ஊடகங்களில் தனியாக நேர்காணல் அளிக்க அனுமதிக்கப்பட்டவர்கள் பட்டியலிலும் இடம் பெற்றார். இந்தப் பட்டியலில் டி.கே.எஸ்.இளங்கோவனுடன் மேலும் 6 பேர் இடம் பிடித்தனர்.
Read More: திமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா?’
பகலில் இப்படி பதவி கொடுத்து அழகு பார்த்த திமுக, இரவில் டி.கே.எஸ்.இளங்கோவனுக்கு அதிர்ச்சி செய்தி ஒன்றை வைத்திருந்தது. அவர் மிகவும் விரும்பி மேற்கொண்ட திமுக செய்தி தொடர்பு செயலாளர் என்கிற பொறுப்பை அவரிடம் இருந்து பறித்து அறிக்கை வெளியிட்டது திமுக தலைமை! எனவே தற்போது கட்சியில் பொறுப்பில் இல்லாமல், நாடாளுமன்ற உறுப்பினராக மட்டுமே இயங்குகிறார் டி.கே.எஸ்.இளங்கோவன். ஊடக விவாதங்களுக்கும் அவர் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
டி.கே.எஸ்.இளங்கோவன் பதவி நீக்கத்திற்கான காரணத்தை திமுக தலைமை அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. எனினும் கட்சி வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘திமுக தலைமையகமான அறிவாலயத்தில் விரைவில் கருணாநிதியின் முழு உருவச் சிலை திறக்கப்பட இருக்கிறது. இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில், கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவிற்கு அதிமுகவினரை அழைக்க மாட்டோம் என்று குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.
கலைஞர் சிலையின் திறப்பு விழாவிற்கு அதிமுகவினரை அழைப்பது தொடர்பாக கட்சி நிர்வாகிகள் மற்றும் தலைவரை ஆலோசிக்காமல் முடிவெடுத்து பேசியதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது’ என திமுக வட்டாரத்தில் கூறுகின்றனர்.
கட்சி அறிக்கை