/tamil-ie/media/media_files/uploads/2019/05/z766.jpg)
Tamil Nadu news today live updates
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை - அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாகத்தில், 25-05-2019 (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க - Tamilnadu Election Results 2019 Live: ஓ.பி.எஸ். மகனுக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா? அமைச்சரவை குறித்து ஆலோசிக்க பாஜக அழைப்பு
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம், சனிக்கிழமை மாலை 5 மணிக்கு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும். புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
”கழக தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில், சென்னை - அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாகத்தில், 25-05-2019 (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும்”
- கழகப் பொதுச்செயலாளர் பேராசிரியர் அறிவிப்பு. pic.twitter.com/CZFBo5lLuD
— DMK - Dravida Munnetra Kazhagam (@arivalayam) 24 May 2019
மேலும் படிக்க - 'இவரு எப்படியா தோத்தாரு; நம்பவே முடில'! தமிழகத்தில் தோல்வியைத் தழுவிய நட்சத்திர வேட்பாளர்கள்
திமுக சார்பில் மொத்தம் 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.