Advertisment

கொடநாடு விவகாரம் : ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் - திமுக அறிவிப்பு

சென்னை மாவட்ட திமுக செயலாளர்கள் தலைமையில் இந்த ஆர்பாட்டம் நடைபெறும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கொடநாடு விவகாரம் ஆளுநர் மாளிகை முன்பு திமுக போராட்டம், Kodanad Issue

கொடநாடு விவகாரம் ஆளுநர் மாளிகை முன்பு திமுக போராட்டம்

கொடநாடு விவகாரம் ஆளுநர் மாளிகை முன்பு திமுக போராட்டம் :  கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலைகள் தொடர்பாக டெஹல்கா பத்திரிக்கையின் முன்னாள் நிருபர் மேத்யூ சாமுவேல் எடுத்த குறும்படம் தமிழக அரசியலில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.

Advertisment

அதில், கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கொள்ளையடிக்கச் சென்ற சயன் மற்றும் வாளையார் மனோஜ் இருவரும் இந்த கொள்ளைக்கும், கொடநாட்டில் மர்மான முறையான கொலைகளுக்கும் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார் என்று கூறினர்.

அதனைத் தொடர்ந்து அந்த இரண்டு நபர்களையும் கைது செய்ய டெல்லி விரைந்தது தனிப்படை.  அவர்களை நீதிபதிகள் முன்பு நேரில் ஆஜர்படுத்த, இருவரையும் ஜாமினில் வெளியிட்டது நீதிமன்றம்.

கொடநாடு விவகாரம் : ஏற்கனவே புகார் அளித்த ஸ்டாலின்

ஏற்கனவே கொடநாடு விவகாரம் தொடர்பாக, பழனிச்சாமி மீது புகார் அளித்தனர் திமுகவினர். மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, எம்.பி., ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ஆ.இராசா உள்ளிட்ட தலைவர்களுடன் தன்னுடைய புகாரை அளித்தார் முக ஸ்டாலின்.

அதில் நான்கு முக்கியமான கோரிக்கைகளை முன்னிறுத்தி அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். ஆனால் தற்போது வரை, அந்த புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆளுநரிடம் அளித்த புகாரில் இடம் பெற்றிருந்த தகவல்கள் என்னென்ன ?

கொடநாடு விவகாரம் ஆளுநர் மாளிகை முன்பு திமுக போராட்டம் - நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிப்பு

கொடநாடு விவகாரம் தொடர்பாக ஆளுநர் விரைவாக நடவடிக்கை எடுக்கக் கோரி, ராஜ்பவன் முன்பு நாளை மறுநாள் (24/01/2019) ஆர்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  சென்னை மாவட்ட திமுக செயலாளர்கள் தலைமையில் இந்த ஆர்பாட்டம் நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க : கொடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவருக்கும் ஜாமீன்.. பின்னால் இருப்பது யார்?

Dmk Kodanad
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment