doctors and experts recommended CM Edappadi Palanisamy to extend the lockdown : நான்கு நாட்களில் ஊரடங்கு முடிவுக்கு வருகின்ற நிலையில், மேலும் 2 வாரங்களுக்கு லாக்டவுனை நீட்டிக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இன்று காலை காணொளி காட்சி வாயிலாக, மருத்துவக் குழு ஒன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சுகாதாரத்துறை செயலாளார் பீலா ராஜேஷ் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினர். அப்போது மருத்துவர் குழு, “தொடர்ந்து நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகின்ற காரணத்தால், இந்த ஊரடங்கை மேலும் 14 நாட்கள் நீட்டிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆலோசனை முடிவுற்ற நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மருத்துவ குழுவினர் இதனை உறுதி செய்துள்ளனர். நாளை மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட உள்ளது. லாக்டவுனை நீட்டித்தல் குறித்து நாளை அமைச்சர்கள் மத்தியில் ஆலோசனை செய்ய உள்ளார் முதல்வர். இது தொடர்பாக நாளை முதல்வர் முக்கிய அறிவிப்பை வெளியிடலாம் என்று தெரிய வருகிறது. ஏற்கனவே ஒடிசா மாநிலத்தில், ஊரடங்கு ஏப்ரல் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil