எல்.முருகன் மற்றும் கேசவநாயகம் தலையீடு இல்லை என்றால் அண்ணாமலை தமிழகத்தில் பா.ஜ.க.,வை உயரச் செய்வார் என அக்கட்சியிலிருந்து விலகிய திருச்சி சூர்யா சிவா தெரிவித்துள்ளார்.
திருச்சி சூர்யா சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணாமலையைக் குறிப்பிட்டு, நீங்கள் தமிழக பா.ஜ.க.,வுக்கு கிடைத்த பொக்கிஷம். நிச்சயமாக நீங்கள் 2026ல் தமிழ்நாடு முதலமைச்சர் ஆவீர்கள். கடந்த சில மாதங்களாக உங்களுடன் பணியாற்றியதை மகிழ்ச்சியுடன் என் பாக்கியமாக கருதுகிறேன். நீங்கள் அடுத்த பிரதமர் ஆவதற்கான தகுதிகளை உடையவர். இந்திய அரசியலில் உங்கள் வளர்ச்சியை காண ஆவலுடன் இருக்கிறேன். உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி அண்ணா. எப்போதும் அன்புடன் உங்கள் சகோதரனாக உங்கள் பின்னால் இருப்பேன்.
இதையும் படியுங்கள்: அம்பேத்கர் மணி மண்டபத்தில் இந்து மக்கள் கட்சி – வி.சி.க இடையே தள்ளுமுள்ளு
எல்.முருகன் மற்றும் கேசவநாயகம் மகிழ்ச்சி அடைவார்கள். இருவரும் இனியாவது கட்சி தொண்டர்களை நம்ப முயற்சியுங்கள். உங்கள் தலையீடு இல்லாவிட்டால் என் தலைவர் (அண்ணாமலை) பல அற்புதங்களைச் செய்வார். நம்முடைய மக்கள் தலைவரை கொஞ்சம் சுதந்திரமாக செயல்படவிடுங்கள். காயத்ரி மற்றும் டெய்சியை வைத்து உங்கள் ஆட்டத்தை விளையாடாதீர்கள். தமிழ்நாட்டில் பா.ஜ.க வெற்றி பெற வேண்டும் என்றால், நீங்கள் இருவரும் எனது தலைவர் வழியில் வராதீர்கள். என் அன்புச் சகோதரர் அண்ணாமலை மீது எப்போதும் பாசத்துடன், உங்கள் அன்புத் தம்பி திருச்சி சூர்யா சிவா. இவ்வாறு அவர் கடிதம் வெளியிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil