Advertisment

கொரோனா : மருத்துவர் சடலத்தை புதைக்க மறுப்பு தெரிவித்த 14 பேர் மீதும் குண்டர் சட்டம்!

ஆம்புலன்ஸ் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தினார்கள். அதில் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் காயம் அடைந்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Dr Simon Hercules death : 14 held under Goondas act for denied to bury his corpse

Doctor Simon Hercules

Dr Simon Hercules Death :  சென்னை அமைந்தக்கரையில் உள்ள நெல்சன் மாணிக்கம் சாலை பகுதியை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தனியார் மருத்துவமனை ஒன்றை நடத்தி வந்தார். அவர் நரம்பியல் நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் அமைந்திருக்கும் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்து போனார்.

Advertisment

மேலும் படிக்க : மே 1 : நம்மைக் காக்க போராடும் அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துகள்

டி.பி. சத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கல்லறைத் தோட்டத்தில் அவரது உடலை புதைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் அப்பகுதியில் வசித்து வந்த மக்கள், அவரது உடலை புதைக்க விடாமல் வன்முறையில் ஈடுபட்டனர். மேலும் ஆம்புலன்ஸ் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தினார்கள்.  அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, அங்கு வன்முறையில் ஈடுபட்ட 14 நபர்களையும் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்நிலையில் ஒரு பெண் உட்பட அவர்கள் 14 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

மேலும் படிக்க : சென்னையில் கொரோனா அதிகரிப்பு: அரசு எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment